பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்! சுகாதார இயக்குனர் வேண்டுகோள்

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்' என, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல்வேறு துறைகளுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:l மாவட்ட வாரியாக, உள்ளாட்சி அமைப்பினர், வருவாய் துறையினர், பேரிடர் மீட்பு துறையினருடன் இணைந்து, மீட்பு பணிகளை

சென்னை:'வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்' என, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



latest tamil news




பல்வேறு துறைகளுக்கும், அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:l மாவட்ட வாரியாக, உள்ளாட்சி அமைப்பினர், வருவாய் துறையினர், பேரிடர் மீட்பு துறையினருடன் இணைந்து, மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்
* மீட்பு வாகனங்கள், டாக்டர்கள் அடங்கிய மீட்பு குழு, சுகாதார ஆய்வாளர்கள், இதர சுகாதார துறை பணியாளர்கள், 24 மணி நேரமும், மீட்பு பணிகளுக்காக தயாராக இருக்க வேண்டும். அரசு டாக்டர்கள் எந்நேரமும், எப்பகுதியிலும் பணியாற்ற, தயாராக இருக்க வேண்டும்

* மருத்துவமனைகள், அரசு சுகாதார மையங்களில் மின்தடை ஏற்படாத வண்ணம், ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்த வேண்டும். மேலும், 'டார்ச் லைட்' போன்ற அவசரகால மின்சாதனங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்l


latest tamil news




மருத்துவமனைகளில், தேவையான மருந்துகள், போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

* பொதுமக்கள் தங்க வைக்கப்பட உள்ள மீட்பு முகாம்களில், கொரோனா மற்றும் மழைக்கால நோய் பரவலை கட்டுப்படுத்த, மருத்துவ குழுவினர் வாயிலாக, முகாம்கள் நடத்தப்பட வேண்டும்l


புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, தேவையான நிவாரண உதவிகளை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்

* உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக வினியோகிக்கும் குடிநீரில், குளோரின் கலப்பதை உறுதிப்படுத்த வேண்டும்l மழைக்கால காய்ச்சல் பரப்பும் கொசு புழு உருவாகும் இடங்களை கண்டறிந்து, அழிக்க வேண்டும்l

மாவட்டம் தோறும், மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் தலைமையில், மாவட்ட வாரியாக, கட்டுப்பாட்டு மையம் அமைத்து, பொதுமக்களுக்கு தேவையான சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-அக்-202007:22:05 IST Report Abuse
Mani . V அனைவரும் மழை நீரை பிடிக்க அண்டா, குண்டாவுடன் தயாராக இருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X