அரசியல் செய்தி

தமிழ்நாடு

4 வாரம் அவகாசம் தேவை: ஸ்டாலினுக்கு கவர்னர் கடிதம்

Updated : அக் 24, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (26+ 13)
Share
Advertisement
சென்னை : 'இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறேன்; முடிவெடுக்க, மூன்று அல்லது நான்கு வாரங்கள் அவகாசம் தேவை' என, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றி, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.'நீட்'
4 வாரம் அவகாசம் தேவை:  ஸ்டாலினுக்கு கவர்னர் கடிதம்

சென்னை : 'இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறேன்; முடிவெடுக்க, மூன்று அல்லது நான்கு வாரங்கள் அவகாசம் தேவை' என, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றி, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது.
'நீட்' தேர்வு முடிவுகள் வந்தும், கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், சேர்க்கைக்கான அறிவிப்பை அரசு வெளியிடாமல் உள்ளது. இதுகுறித்து, அரசின் மூத்த அமைச்சர்கள், சில தினங்களுக்கு முன், கவர்னரை சந்தித்து, ஒப்புதல் அளிக்க கேட்டுக் கொண்டனர்.


இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், இது தொடர்பாக, கவர்னருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஸ்டாலினுக்கு நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, தங்களின் கடிதம் கிடைத்தது. இட ஒதுக்கீடு மசோதா குறித்து, அனைத்து கோணங்களிலும் கலந்தாலோசனை நடத்தி வருகிறேன். இது குறித்து முடிவு எடுக்க எனக்கு, மூன்று அல்லது நான்கு வாரங்கள் அவகாசம் தேவை. சமீபத்தில், என்னை சந்தித்த அமைச்சர்களிடமும், இதே கருத்தை தெரிவித்தேன்.இவ்வாறு, கவர்னர் கூறியுள்ளார்.


நாளை ஆர்ப்பாட்டம்



தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தியும், அவருக்கு, அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க தவறிய, அ.தி.மு.க., அரசை கண்டித்தும், நாளை, கவர்னர் மாளிகை முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம். அநியாயம் அக்கிரமம்!! நீட கேன்சல் என எழதி கையெழுத்து போட 1மாதம் அவகாசமா?? . அதுவும் எங்கள் தளபதி மறியல் போராட்டம் செய்வேன் என்று சொன்னவுடன் பயந்து விட்டார்கள் சங்கிகள். இதைத்தான் எங்கள் பேரறிஞர்? அண்ணா அன்றே சொன்னார் ஆட்டுக்கு தாடி நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை என்று!!.
Rate this:
natarajan s - chennai,இந்தியா
24-அக்-202007:20:34 IST Report Abuse
natarajan sசரி, ஆடு அண்ணாவிடம் சொல்லியதா எனக்கு தாடி எதற்கு என்று ? இப்படி விளங்காமல் பேசியே நம்மையும் விளங்காதவர்களாவே ஆக்கி விட்டார்கள்....
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
23-அக்-202013:30:38 IST Report Abuse
பாமரன் சட்டசபை தீர்மானம் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யுதே தவிர, அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு அல்ல.... அரசு பள்ளிகளில் யார் வேண்டுமானாலும் சேரலாம்... இந்த உள் ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளிகளில் தரம் உயர நிறையவே வாய்ப்பிருக்கு... இங்கு கூவும் யாருடைய குடும்ப குழந்தைகளும் அரசு பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பு இல்லை... அதனால் தான் இவ்ளோ சவுண்ட் உடுதுங்க... இந்த அரசு செய்யும் மிக சில நல்ல விஷயங்களில் இந்த உள் ஒதுக்கீடு ஒன்று...
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
23-அக்-202013:09:24 IST Report Abuse
Allah Daniel ஆமா டெல்லியில் 38 தியமுக MP எண்ணத்தை செஞ்சி கிழிச்சிட்டு இருக்காங்க.. சுடலை சொன்ன மாதிரி, ஒரு தியமுக MP யாவது தீக்குளிவேண்டியதுதானே...நாட்டுக்கு நல்லது...
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
23-அக்-202013:31:41 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்ஆமா டெல்லியில் 303 BJP MP எண்ணத்தை செஞ்சி கிழிச்சிட்டு இருக்காங்க சொல்லுங்க , எல்லாவற்றிற்கு ஆமாம் சாமி தான் அப்புறம் என்ன...
Rate this:
23-அக்-202013:42:40 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு யூ.எஸ்.ஏ :: உல்லாஸ்நகர் சித்து அச்சொசியாடின் ஆஹ் என்ன முதலில் ஒரு தெருவுக்கு 50 வோட்டு வாங்க பாரு அப்பரும் பேசு...
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
23-அக்-202018:25:38 IST Report Abuse
கொக்கி குமாரு வாய்ப்பே இல்லை ராஜா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X