பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் கிராமங்களில் வரப்பு உயர்த்தும் பணி துவக்கம்

Added : அக் 22, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை வனப்பகுதியில் உள்ள, மலைவாழ் கிராமங்களில், விவசாய நிலங்களில் வரப்புகள் உயர்த்தி அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.காரமடை அடுத்த வெள்ளியங்காடு ஊராட்சியில், பத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் வசிக்கும், மலைவாழ் கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள நிலங்கள், இவர்களுக்கு விவசாயம் செய்ய வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக
 மலைவாழ் கிராமங்களில் வரப்பு உயர்த்தும் பணி துவக்கம்

மேட்டுப்பாளையம்:காரமடை வனப்பகுதியில் உள்ள, மலைவாழ் கிராமங்களில், விவசாய நிலங்களில் வரப்புகள் உயர்த்தி அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.காரமடை அடுத்த வெள்ளியங்காடு ஊராட்சியில், பத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் வசிக்கும், மலைவாழ் கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள நிலங்கள், இவர்களுக்கு விவசாயம் செய்ய வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், நிலத்தை சீர்திருத்தம் செய்தும், வரப்புகளை உயர்த்தியும், பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். வரப்புகளில் அருகே மழை நீர் தேங்கி நிற்கும் பாத்திகளும் அமைத்து வருகின்றனர்.
இதனால் மழைக்காலங்களில், மண் அரிப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, பாத்திகளில் தேங்கி நிற்கும் தண்ணீர், விவசாயத்திற்கு பயனளிக்கும் வகையில் அமைத்து வருகின்றனர். சொரண்டி, கூடப்பட்டி, எழுத்துக்கள் புதுார், குண்டூர், குறவன் கண்டி ஆகிய மலைவாழ் கிராமங்களில், தற்போது வரப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ஆதிமாதையனுார், காளியூர், சுண்டக்கரைபுதுார் ஆகிய பகுதிகளில், வரப்புகள் அமைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X