பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயம் செழிக்க உதவும் வெள்ளியங்காடு குட்டை: நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிப்பு

Added : அக் 22, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:வெள்ளியங்காடு குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரால், ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் நீர் ஊற்று கிடைத்து வருகிறது. இதனால் விவசாயம் செழிப்படைந்துள்ளது.காரமடை அடுத்த வெள்ளியங்காடு ஊராட்சியில், 152 ஏக்கரில் குட்டை உள்ளது. இதில் தேங்கியுள்ள தண்ணீர், சுற்றுப்பகுதியில் உள்ள சிறிய குட்டைகளுக்கும், தடுப்பணைகளுக்கும்
 விவசாயம் செழிக்க உதவும் வெள்ளியங்காடு குட்டை: நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிப்பு

மேட்டுப்பாளையம்:வெள்ளியங்காடு குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரால், ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் நீர் ஊற்று கிடைத்து வருகிறது. இதனால் விவசாயம் செழிப்படைந்துள்ளது.காரமடை அடுத்த வெள்ளியங்காடு ஊராட்சியில், 152 ஏக்கரில் குட்டை உள்ளது. இதில் தேங்கியுள்ள தண்ணீர், சுற்றுப்பகுதியில் உள்ள சிறிய குட்டைகளுக்கும், தடுப்பணைகளுக்கும் செல்லும் வகையில், பொதுப்பணித்துறையினர், வாய்க்கால் அமைத்துள்ளனர்.
மழைக்காலத்தில் மட்டுமே, இக்குட்டையில் தண்ணீர் தேங்கி வந்தது.கோவை மாநகராட்சி அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டம் அமைத்தபோது, தண்ணீரை சுத்தம் செய்யும் போது, வெளியேற்றப்படும் கழிவு நீரை, இக்குட்டையில் தேக்கி வைக்கும்படி, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, இந்தக் குட்டைக்கு கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தண்ணீர் நிரம்பி உள்ளது. இதிலிருந்து வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீர், வெள்ளியங்காடு, சின்ன கண்டியூர், பெரிய கண்டியூர், மாந்தரைகாடு ஆகிய பகுதிகளில் உள்ள சிறிய குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் தேங்கி வருகிறது.ஆண்டு முழுவதும் குட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில், தொடர்ச்சியாக நீர் ஊற்று கிடைத்து வருகிறது. ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு விவசாயம் செழிப்படைந்து உள்ளது.
வெள்ளியங்காடு பகுதி விவசாயிகள் கூறியதாவது:வெள்ளியங்காடு, கண்டியூர் பகுதி முழுவதும், கிணற்று தண்ணீரை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. குட்டையில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருக்கும். மற்ற நாட்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும். கோவை மாநகராட்சி இரண்டாவது குடிநீர் திட்ட கழிவு நீர் குட்டையில் தேக்கி வைப்பதால், தற்போது ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி உள்ளது.இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் கிணறுகளுக்கு நீர் ஊற்று கிடைத்து வருவதால், நல்ல முறையில் விவசாயம் செய்து வருகிறோம்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X