சென்னை: ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே, தமிழகத்தின் தலைநகரமான சென்னை தள்ளாடுகிறது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று(அக்.,22) பிற்பகல், 3:30 மணிக்கு லேசாக துவங்கிய மழை, மாலை, 5:30 மணி வரை, வெளுத்துக் கட்டியது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை நீரால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் மழை குறித்து கமல் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது: ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை.
கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE