பொது செய்தி

இந்தியா

கடற்படையில் பெண் பைலட்கள் சேர்ப்பு

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கொச்சி : நம் கடற்படையில், 'டார்னியர்' விமானங்களை இயக்க, முதல் முறையாக, மூன்று பெண் பைலட்கள் நேற்று பொறுப்பேற்றனர்.இந்திய கடற்படையில், விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி முடித்து, ஆறு பைலட்கள், கேரளாவின் கொச்சியில் உள்ள, ஐ.என்.எஸ்., கருடா படைத்தளத்தில், பயிற்சி முடித்து நேற்று பொறுப்பேற்றனர். இதில், கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, மூன்று பெண் பைலட்கள் பொறுப்பேற்றுக்
 கடற்படையில் பெண் பைலட்கள் சேர்ப்பு

கொச்சி : நம் கடற்படையில், 'டார்னியர்' விமானங்களை இயக்க, முதல் முறையாக, மூன்று பெண் பைலட்கள் நேற்று பொறுப்பேற்றனர்.இந்திய கடற்படையில், விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி முடித்து, ஆறு பைலட்கள், கேரளாவின் கொச்சியில் உள்ள, ஐ.என்.எஸ்., கருடா படைத்தளத்தில், பயிற்சி முடித்து நேற்று பொறுப்பேற்றனர்.
இதில், கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, மூன்று பெண் பைலட்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். லெப்டினன்ட் திவ்யா சர்மா, லெப்டினன்ட் சுபாங்கி ஸ்வரூப், லெப்டினன்ட் ஷிவாங்கி ஆகியோருக்கு, அட்மிரல் ஆன்டனி ஜார்ஜ் பதக்கங்களை வழங்கி, பணியில் சேர்த்தார்.
இந்த பைலட்கள் மூவருக்கும், நம் விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றில், பயிற்சி அளிக்கப்பட்டன.


latest tamil newsஅதன் பின், தெற்கு கடற்படை பிரிவில் உள்ள, பல்வேறு பயிற்சி பள்ளிகளில், ஒரு மாதம் தரை வழி பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அதன் பின், எட்டு மாதங்கள், விமானம் இயக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டன. இதில், திவ்யா சர்மா, டில்லியின் மால்வியா நகரைச் சேர்ந்தவர். சுபாங்கி ஸ்வரூப், உ.பி.,யின் தில்ஹாரையும், ஷிவாங்கி, பீஹாரின், முசாபர்பூரையும் சேர்ந்தவர்கள். தெற்கு கடற்படை பிரிவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இவர்கள், டார்னியர் விமானங்களை இயக்கும், முதல் பெண் பைலட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Salem,இந்தியா
23-அக்-202010:46:04 IST Report Abuse
Krish வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
N.SUBBARAMAN - chennai,இந்தியா
23-அக்-202008:08:04 IST Report Abuse
N.SUBBARAMAN தமிழ் பெண்மணிகளின் வீரம் இப்போது சீரியல், சினிமா பார்ப்பதிலும் கூடுதலாக டாஸ்மாக் செல்வதிலும் கழிகிறது .
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
23-அக்-202006:18:28 IST Report Abuse
 Muruga Vel தமிழ் பெண்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது ..பீகார் உத்திர பிரதேச பெண்கள் இந்த பெருமையை அடைந்திருக்கிறார்கள் ...ரபேல் விமானியாகவும் பீகார் பெண் ... கல்பனா சாவ்லா பஞ்சாபி ..புலிய முறத்தால் விரட்டின தமிழச்சிகளின் வீரம் புத்தகங்களோடு முடிந்து விட்டதா ..
Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
23-அக்-202007:52:40 IST Report Abuse
Loganathan Kuttuvaதமிழ் நாட்டில் இருந்து ராணுவம் கடற்படை எல்லை பாதுகாப்பு படை மத்திய ரிசர்வ் போலீஸ் இவற்றில் சேர்வோர் மிக குறைவு.உடல் தகுதி கல்வி தகுதி முக்கியம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X