சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச பொறியாளர் மனைவி லாக்கரில் 50 பவுன் தங்க காசு

Added : அக் 23, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
வேலுார்: லஞ்ச புகாரில் சிக்கிய வேலுார், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், மனைவியின் வங்கி லாக்கரில் இருந்து, 50 சவரன் தங்க காசுகள் கைப்பற்றப்பட்டன.வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர், பன்னீர்செல்வம், 51; புகாரின்படி, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், கடந்த,
 லஞ்சம், பொறியாளர், தங்க காசு

வேலுார்: லஞ்ச புகாரில் சிக்கிய வேலுார், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், மனைவியின் வங்கி லாக்கரில் இருந்து, 50 சவரன் தங்க காசுகள் கைப்பற்றப்பட்டன.

வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர், பன்னீர்செல்வம், 51; புகாரின்படி, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், கடந்த, 13ல் அவரது இரு வீடுகளில் இருந்து, 3.98 கோடி ரூபாய், 3.6 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள, 90 சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.


latest tamil news



பன்னீர்செல்வம், அவரது மனைவி புஷ்பா ஆகியோர் பெயர்களில், 20 வங்கி கணக்குகள், 20 லாக்கர்கள் உள்ளன. இதை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ராணிப்பேட்டையில் உள்ள ஸ்டேட் வங்கியில், அவரது மனைவி புஷ்பா பெயரிலுள்ள லாக்கரை நேற்று ஆய்வு செய்ததில், மொத்தம், 50 சவரன் தங்க காசுகள் இருந்தன. இதை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விசாரணையில், பணத்துக்கு பதிலாக தங்க காசுகளை, பன்னீர்செல்வம் லஞ்சமாக வாங்கியது தெரிந்தது.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கூறுகையில், 'பன்னீர்செல்வத்திடம் நாள்தோறும் விசாரணை நடக்கிறது. இதனால் அவரது, சொத்து பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - thiruvarur,இந்தியா
23-அக்-202016:13:17 IST Report Abuse
babu இவநை போல் பல திருடர்கள் அனைத்து தாலுகா ஆஃபீசிலும் உள்ளனர் . 1, சர்வேயர் , 2, வருவாய் ஆய்வாளர் 3, தாசில்தர் . அனைவரும் தடுக்க பட வேண்டும்
Rate this:
Cancel
babu - thiruvarur,இந்தியா
23-அக்-202016:07:47 IST Report Abuse
babu இவரை போல் பல திருடர்கள் அனைத்து தாலுகா ஆஃபீசிலும் உள்ளனர் . 1, சர்வேயர் , 2, வருவாய் ஆய்வாளர் 3, தாசில்தார்
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
23-அக்-202016:01:46 IST Report Abuse
ponssasi இவனுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள் யார்? யார்?. எந்த விதி மீறலுக்காக இந்த பணம் வாங்கப்பட்டது. இதனால் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு, இவனிடம் லஞ்சம் பெற்றவர்கள் யார்? யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன, வகிக்கும் பதவி அவரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?என்பதை எல்லாம் விரிவாக மக்களுக்கு சொல்ல இந்த அரசு கடமைப்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X