சி.பி.ஐ.,க்கு மஹாராஷ்டிராவில் தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சி.பி.ஐ.,க்கு மஹாராஷ்டிராவில் தடை

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (10)
Share
மும்பை: மாநில அரசின் அனுமதி இன்றி, எந்த வழக்கையும், சி.பி.ஐ., அதிகாரிகள் மஹா.,வில் விசாரிக்க முடியாது என அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.சில பெயர் குறிப்பிடப்படாத 'டிவி' சேனல்கள், 'டி.ஆர்.பி., ரேட்டிங்' எனப்படும், பார்வையாளர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வெளியிடும் முறையில், மோசடியில் ஈடுபட்டதாக, உத்தர பிரதேச போலீசார் பதிவு செய்த வழக்கு, சி.பி.ஐ., வசம், நேற்று
CBI, TRP scam, Maharashtra

மும்பை: மாநில அரசின் அனுமதி இன்றி, எந்த வழக்கையும், சி.பி.ஐ., அதிகாரிகள் மஹா.,வில் விசாரிக்க முடியாது என அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில பெயர் குறிப்பிடப்படாத 'டிவி' சேனல்கள், 'டி.ஆர்.பி., ரேட்டிங்' எனப்படும், பார்வையாளர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வெளியிடும் முறையில், மோசடியில் ஈடுபட்டதாக, உத்தர பிரதேச போலீசார் பதிவு செய்த வழக்கு, சி.பி.ஐ., வசம், நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், மஹாராஷ்டிராவிலும், இது போன்ற வழக்குகள் விசாரணையில் உள்ளதால், அங்கு சி.பி.ஐ.,க்கு வழங்கியிருந்த ஒப்புதலை, அம்மாநில அரசு, நேற்று ரத்து செய்தது. 'மாநில அரசின் அனுமதி இன்றி, எந்த வழக்கையும், சி.பி.ஐ., அதிகாரிகள் இங்கு விசாரிக்க முடியாது' என, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நேற்று தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X