நவாசை நாடு கடத்துங்கள்: பிரிட்டனிடம் கெஞ்சும் பாக்.,

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, லண்டனில் இருந்து நாடு கடத்தும்படி, பிரிட்டன் அரசிடம், மூன்றாவது முறையாக, பாக்., கோரிக்கை வைத்துள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 70, மீது, பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததை அடுத்து, 2017ல், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில், அல் - அஸீஸா ஸ்டீல் ஆலை வழக்கில்,

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, லண்டனில் இருந்து நாடு கடத்தும்படி, பிரிட்டன் அரசிடம், மூன்றாவது முறையாக, பாக்., கோரிக்கை வைத்துள்ளது.



latest tamil news


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 70, மீது, பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததை அடுத்து, 2017ல், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில், அல் - அஸீஸா ஸ்டீல் ஆலை வழக்கில், நவாசுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, 2018ல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த ஆண்டு நவம்பரில், நவாசின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பிய நாடான பிரிட்டன் செல்ல, லாகூர் உயர் நீதிமன்றம் எட்டு வாரங்களுக்கு அனுமதி அளித்தது. சிகிச்சைக்காக லண்டன் சென்ற நவாஸ், பாக்., திரும்பவில்லை. பல்வேறு காரணங்கள் கூறி, காலம் கடத்தி வருகிறார்.அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்து, லாகூர் உயர் நீதிமன்றம், கடந்த மாதம் உத்தரவிட்டது.


latest tamil news


இந்நிலையில், நவாசை நாடு கடத்தும்படி, பிரிட்டன் அரசுக்கு, ஏற்கனவே இரண்டு முறை, பாக்., அரசு கோரிக்கை வைத்தது.இந்நிலையில், மூன்றாவது முறையாக, பிரிட்டன் துாதரிடம், நேற்று கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. அதில், 'சொந்த நாட்டில், நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற நபரை, உடனடியாக நாடு கடத்த வேண்டும் என, பிரிட்டன் குடியுரிமை சட்டம் தெரிவிக்கிறது.எனவே, நவாஸ் ஷெரீப்பின் விசாவை ரத்து செய்து, உடனடியாக அவரை நாடு கடத்த வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-அக்-202015:09:16 IST Report Abuse
Dr. Suriya அவங்களே பல நாட்டை சுரண்டி கொள்ளை அடித்தவர்கள் தானே...இந்தியா உட்பட.....அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவார்கள்....அவங்க நாட்டு சட்டம் அப்படி......
Rate this:
Cancel
23-அக்-202013:50:09 IST Report Abuse
ஆரூர் ரங் இன்னும் அடாவடி காலனியாதிக்க புத்தி மாறவில்லை.
Rate this:
Cancel
23-அக்-202013:50:05 IST Report Abuse
ஆரூர் ரங் அடைக்கலம் கேட்டு வரும் ஒவ்வொரு வி ஐ பி கிரிமினலும் பிரிட்டிஷ் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பெரிய💰 ஆஸ்தி 👍🏻சொத்து💰💰 ஐஸ்வர்யம். ஒரு பக்கம் வி ஐ .பி யிடம் நிறைய💰💰 கறக்கலாம்.இன்னொரு புறம் ராஜாங்க ரீதியாக (மறைமுக மிரட்டல் மூலம்) வி ஐ பி சார்ந்த நாட்டிடம் வணிக ஒப்பந்தங்கள், வெளியுறவில் ஆதரவு என தாராளமாக லாபம். காலிஸ்தான்👹 பயங்கரவாதிகளை😡 இந்தியாவுக்கு அனுப்ப விலையாக ஓட்டை உடைசல் ஹெலிகாப்டர்களை தலையில் கட்டினர். ஒவ்வொன்றாக விபத்தில் சிக்கி நம்மவர் பலர் மரணம்.ஆக ஆக 1947 விடுதலை முழுமையானதல்ல. இன்னும் அடாவடி காலனியாதிக்க புத்தி மாறவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X