சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; அமைச்சர் வாரிசுகளால் ஆளுங்கட்சிக்கு சிக்கல்!

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (78)
Share
Advertisement
பல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, அறநிலையத் துறை பெண் அதிகாரி ஒருவர், அமைச்சர்களின் வாரிசுகள் சிபாரிசால், மீண்டும் தலைமையிடத்திற்கு திரும்பி இருப்பது, கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்குத் தயாராக வேண்டிய நிலையில், நற்பெயரை சம்பாதிக்க வேண்டிய அமைச்சர்கள், அவர்கள் வாரிசுகளின் இத்தகைய செயல்பாடுகள்,

பல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, அறநிலையத் துறை பெண் அதிகாரி ஒருவர், அமைச்சர்களின் வாரிசுகள் சிபாரிசால், மீண்டும் தலைமையிடத்திற்கு திரும்பி இருப்பது, கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்குத் தயாராக வேண்டிய நிலையில், நற்பெயரை சம்பாதிக்க வேண்டிய அமைச்சர்கள், அவர்கள் வாரிசுகளின் இத்தகைய செயல்பாடுகள், ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக உள்ளது.latest tamil newsதமிழகத்தில், அதிக வருவாய் ஈட்டும் துறைகளில், அறநிலையத் துறை முதன்மையானதாக உள்ளது. ஆனால், அத்துறை சில ஆண்டுகளாக, சிலை கடத்தல், ஊழல், முறைகேடு, மோசடி, அரசியல் குறுக்கீடு ஆகியவற்றால், கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளன. இதற்கு முக்கிய காரணம், அத்துறையில் உள்ள சில சுயநல அதிகாரிகள் தான். இவர்களில் பெண் உதவி கமிஷனர் ஒருவர், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். இவர், அறநிலையத் துறை கமிஷனர் இடமாறுதல் உத்தரவை மதிக்காததால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

அவர், அரசியல் பலத்துடன் மீண்டும் தலைமையிடத்தில் பதவி பெற்று, துணை கமிஷனர் அந்தஸ்துள்ள கோவிலுக்கான பொறுப்பேற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, ஆன்மிக நல விரும்பிகள், சக அதிகாரிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏகப்பட்ட குற்றச்சாட்டு உள்ள ஒரு நபருக்கு, மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் அளித்து, பொறுப்பான பதவி பெற்று தருவதன் பின்னணியில், அமைச்சர்களின் வாரிசுகள் வரிந்துகட்டி செயல்படுவது தெரிய வந்துள்ளது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தேர்தலை முன்னிட்டு, இதைக் கையில் எடுத்த அமைச்சர்களின் முகத்திரையை கிழிக்க, எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

இதுகுறித்து, ஆன்மிக நல விரும்பிகள் தரப்பில் கூறியதாவது: அறநிலையத் துறையை ஆட்டி வைப்பவர்; பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்; உத்தரவுகளை மதிக்காமல் கமிஷனர்களுக்கே நேரடியாக சவால் விடுபவர் என, பல்வேறு விஷயங்களுக்கு ஆளானவர் உதவி கமிஷனர் ஜோதிலட்சுமி.

சின்னசேலத்தை சேர்ந்த இவர், குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். பி.எல்., படித்தவர்; இவர் அறநிலையத் துறை உதவி கமிஷனர் பதவிக்கு, 'குரூப் - 1' பி தேர்வு எழுதினார். தேர்வு முடிவில், மதுரையை சேர்ந்த ஒரு ஏழைப் பெண்ணும், இவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். அவரை ஓரம் கட்டி இவர் பதவியை பறித்ததாக, ஆரம்பத்திலேயே குற்றச்சாட்டு உள்ளது.

இதையடுத்து, திருவொற்றியூர் கோவில் உதவி கமிஷனராக பணியாற்றினார். அப்போது, சிலைகள் புனரமைப்பு, தங்கத்தேர் செய்வதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விஜிலன்ஸ் விசாரணைக்கு ஆளானார். அந்த காலக்கட்டத்தில் தான் மதுரவாயல் பகுதியில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை கட்டினார்.

இதனால், அவர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு, இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போதைய அறநிலையத் துறை அமைச்சரை சரிகட்டி, சென்னையில் தலைமையகத்தில் நகை மதிப்பீட்டாளர் பதவியை பெற்றார். அதனுடன், கூடுதல் பொறுப்பாக, துணை கமிஷனர் அந்தஸ்து உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பொறுப்பு ஏற்றார். அங்கும் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.


latest tamil news'கோவில் ஆவணங்களை எரித்தது; பக்தர்கள் காணிக்கை, 37 லட்சம் ரூபாயை செல்லாக்காசாக்கியது; ஆகம விதிகளுக்கு எதிராக கோவில் நடை திறந்தது. 'வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகளை முறைகேடாக விற்பனை செய்தது; அறநிலையத் துறை வீட்டை இடித்து விட்டதாக பொய் தகவல் கூறி, குடியிருப்பவரிடம் கணிசமான தொகை பெற்றது' என, பல புகார்கள் உள்ளன.

இவ்வளவு புகார் இருந்தும், அவர் தப்பியதற்கு காரணம், பார்த்தசாரதி கோவில் பிரசாதங்களை, தினமும் அமைச்சர்கள் வீடு தேடிக் கொடுத்தது தான். கோவில் பிரசாத செலவால், பல லட்சம் ரூபாய் இழப்பும் ஏற்படுத்தி உள்ளார். மேலும், மயிலாப்பூர் கோவிலுக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து, மேல் வாடகைக்கும் விட்டுள்ளார். அந்த வீட்டை, இன்றளவில் ஒப்படைக்கவில்லை. அதன் வாயிலாக, அக்கோவிலுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவர், இந்தாண்டு ஜனவரியில், ஈரோடு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர், கமிஷனர் உத்தரவை உதாசீனப்படுத்தி, ஈரோட்டில் பொறுப்பேற்காமல் மீண்டும், சென்னைக்கு இடமாற்றம் வாங்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்தார். இதனால், காலவரையற்ற பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் படி, இரண்டு முக்கிய அமைச்சர்கள், அவர்களின் வாரிசுகள் சிபாரிசுடன், 'சஸ்பெண்ட்' உத்தரவை நீக்கி, மீண்டும் தலைமையகத்தில் பூசாரிகள் நலச்சங்க உதவி கமிஷனராக இடமாற்றம் பெற்றுள்ளார். இத்துறைக்கே லாயக்கற்ற இவர் மீது, ஒட்டுமொத்த ஆன்மிக தலைவர்களும், பக்தர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சம்பவத்தால், தகுதியற்ற ஒருவருக்கு ஆதரவு அளித்த அமைச்சர்கள், அவர்கள் வாரிசுகள் மீது, அந்த கோபம் திரும்பியுள்ளது. இது, ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய அவப் பெயர் ஏற்படுத்தும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
27-அக்-202020:41:41 IST Report Abuse
mathimandhiri இது தொடர்பான தினமலரின் வீடியோ அபாரம். இது போல இன்னும் எத்தனையோ தொடர் கேடுகள் இத்துறையில் நடக்கின்றன.கள்ளக் குறிச்சி வீர சோழ்புரம் கடம்ப வனேஸ்வரர் (அர்த்தநாரீஸ்வரர் கோயில் என்ற பெயரில்) கோவிலுக்குச் சொந்தமான பதினான்கு ஹெக்டேர் நிலத்தையும், மற்றும் செய்யூர் கரியமாணிக்க பெருமாள் கோவில் சொத்துக்களையும் எதோ ஒரு விதமாக "பொது நலன்" கருதி விற்பதற்கு அரசு அவசரம் காட்டுவதாக இன்று செய்தி வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மிகப் பழைய கோவில்களை பராமரிப்பின்றி பாழாக விட்டு விட்டு, பின்னர் சொத்து விற்பனை ஏதோ ஒரு விதத்தில் ஜரூராக நடந்தேறும் நிலை இன்று தொடர் கதையாகி வருகிறது. இதில் தின மலர் உண்மை நிலை என்னவென்று கண்டு பிடித்து ஆவண செய்தால் நல்லது. அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையது தான என்றும் ஆராய்ந்தால் நல்லது. பிரிவு 34 என்று கூறப் படுவது பொருந்துமா என்றும் பார்த்தால் நல்லது. அவசரம்.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
27-அக்-202019:48:08 IST Report Abuse
dina திஸ் ஐஸ் டூ மச்
Rate this:
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
23-அக்-202022:02:27 IST Report Abuse
SENTHIL வெட்க கேடான செயல்கள். அறமற்ற துறைக்கு, பெயர் மட்டும் அறநிலையத்துறை. சிவன் சொத்து குல நாசம்.
Rate this:
Badri narayanan poondi - puttaparthi,இந்தியா
25-அக்-202008:49:07 IST Report Abuse
Badri narayanan poondiமன்னர் எவ்வழி மன்னுயிர் அவ்வழி அகில இந்திய சேவை (IAS /IPS etc) அதிகாரிகள் கூட இந்த ஆட்சியாளர்களை சமாளிக்கும் உறுதி அற்று உள்ளது மிக்க கேடு. கிரிமினல்- அரசியல் கட்சிகள் / ஆட்சியாளர்- கூட்டு பற்றி பல்லடுகளாவே அறிந்து அலசப்பட்டு வந்தாலும் எந்த ஆட்சியிலும் அதை தடுக்க முடியவில்லை - அவர்களின் கட்சி தலைவர்களே அதற்கு தடையாக இருப்பர். மோடி இதை தடுக்க முயன்று நிறைய பகைமையை சம்பாதித்து விட்டார் காவல்துறை/அமலாக்க அதிகாரிகள் என பலரும் பிற்காலத்தில் (say, after 1970s) ஆளும் கட்சி அரசு/கட்சி தலைவர்கள் என யாரையும் எளிதாக அணுக முடியவில்லை. திரு மாறன் திரு ராஜா திரு சிதம்பரம் போன்றவர்களும் வெளிப்படையாக மக்கள் அறிந்த முறைகேடுகளுக்கு (பொது வெளியில் /மீடியாவில் வெளியான ஆதாரங்கள் உட்பட) பின்னும் தண்டனை பெறாமல் திரிவது நாம் பார்க்கிறோம்...
Rate this:
SENTHIL - tirumalai,இந்தியா
26-அக்-202012:09:48 IST Report Abuse
SENTHILமுற்றிலும் உண்மை தான். யாரையும் நம்ப முடியவில்லை. கொள்ளை அடிப்பதில் மட்டும் ஒற்றுமை கொண்டாடுவோர் அரசியல்வியாதிகள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X