தேர்தலுக்கு பின் நிதிஷுடன் கூட்டணியா? தேஜஸ்வி யாதவ் பதில்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பாட்னா: பீகார் பொதுத் தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றமாக அமைந்தால் நிதிஷுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு லாலுவின் மகன் தேஜஸ்வி பதிலளித்துள்ளார்.பீகார் தேர்தலில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவிற்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. தேஜஸ்வி ஆரம்பத்தில் நிதிஷ்குமாரின் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார். அதன் பின்னர் பா.ஜ.க.,வுடன் இணைந்து
Tejashwi Yadav, Nitish Kumar, Bihar election

பாட்னா: பீகார் பொதுத் தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றமாக அமைந்தால் நிதிஷுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு லாலுவின் மகன் தேஜஸ்வி பதிலளித்துள்ளார்.

பீகார் தேர்தலில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவிற்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. தேஜஸ்வி ஆரம்பத்தில் நிதிஷ்குமாரின் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார். அதன் பின்னர் பா.ஜ.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இந்நிலையில் பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை என கவர்ச்சிக்கரமான வாக்குறுதியுடன் பிரசாரம் செய்து வருகிறார் தேஜஸ்வி. அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனது பேரணிகளுக்கு கூடும் கூட்டத்தை கண்டு மூன்று முதல்வராக இருந்த நிதிஷ் கவலைப்படுகிறார் என தெரிவித்தார்.

மேலும் அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: செயலற்ற நிதிஷ் குமார் அரசாங்கத்தால் மக்கள் சோர்ந்து போயுள்ளனர். மக்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக எங்களுக்கு வாக்களிப்பார்கள். நிதிஷ் தற்போது சோர்ந்து போனவர். அவரால் இனி மாநிலத்தை நிர்வகிக்க முடியாது. எனக்கு அனுபமில்லை என்கிறார்கள். பின்னர் ஏன் தே.ஜ.கூட்டணியின் 20 ஹெலிகாப்டர்கள் என்னை பின் தொடர்கிறது. ஏனென்றால் மக்கள் நான் சொல்வதை கவனிக்கிறார்கள். குறிப்பாக 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை என்ற வாக்குறுதியை.


latest tamil news



ஆர்.ஜெ.டி., யாதவர்கள், முஸ்லிம்கள் ஓட்டுக்களை கவனத்தில் கொள்கிறது என பிரசாரம் செய்கிறார்கள். எங்கள் கட்சி அவர்களுக்கான கட்சி மட்டுமில்லை, அனைவருக்குமான கட்சி. முஸ்லிம்கள், யாதவர்கள் ஓட்டுக்களை மட்டும் பெற்றிருந்தால் லாலு பிரசாத் முதல்வராக நீடித்திருக்க முடியாது. இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல், அதனால் சாதி ஒரு பொருட்டு கிடையாது. இவ்வாறு கூறினார்.

தொங்கு சட்டமன்றம் அமைந்தால் நிதிஷுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, “இவை எல்லாம் அனுமானங்கள். அவர் ஏற்கனவே பா.ஜ.க.,வுடன் கூட்டணியில் உள்ளார். இரண்டாவது, தொங்கு சட்டமன்றம் அமைந்தால் அது அவருக்கு எதிரான மக்கள் கோபத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் போது அவருடன் எப்படி கூட்டணி சேருவோம். எதிர்காலத்தில் நிதிஷ் குமாருடன் மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-அக்-202012:33:18 IST Report Abuse
Ramesh Sargam "தேர்தலுக்குப்பின் கூட்டணி" - இது ஒரு பக்கா மோசடி ட்ரிக். இதுபோன்ற கூட்டணிகளை முற்றிலும் ஒழித்து நீதிமன்றம் ஆணையிடவேண்டும். அப்படி உருவாகும் அந்த கூட்டணிகளை நீதிமன்றங்கள் அனுமதிக்கக்கூடாது. இது மக்களை ஏமாற்றும் ஒரு ட்ரிக்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
23-அக்-202011:49:16 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\தேஜஸ்வி ஆரம்பத்தில் நிதிஷ்குமாரின் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார். அதன் பின்னர் பா.ஜ.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். .......\\... தவறாக எழுதப்பட்டுள்ளது ........... நிதிஷ் குமார்தான் அதன் பின்னர் பா.ஜ.க.,வுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். .....
Rate this:
Cancel
23-அக்-202008:31:04 IST Report Abuse
ஆரூர் ரங் கூடா நட்பு கேடாய் முடியும். காங்கிரசோடு இனி ஒட்டுமில்லை உறவுமில்லை. கருணாநிதி கூறியது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X