புதுடில்லி: ஜே.இ.இ., முதல்நிலை தேர்வுகள் இனி மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் உள்ள ஐஐடி(இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜே.இ.இ., தேர்வுகள் நடத்தப்படும். இவை ஜே.இ.இ., முதல்நிலை தேர்வு, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு எஜ இரு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலை தேர்வு, ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜே.இ.இ., முதல்நிலை தேர்வுகள், பிற மாநில மொழிகளில் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: தேசிய கல்வி கொள்கையின்படி, ஜே.இ.இ., முதல் நிலை தேர்வுகளை அதிக அளவிலான மாநில மொழிகளில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், கேள்விகளை சரியாக புரிந்து கொள்வதுடன், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE