மாநில மொழிகளில் இனி ஜேஇஇ தேர்வுகள்: பொக்ரியால்| Dinamalar

மாநில மொழிகளில் இனி ஜேஇஇ தேர்வுகள்: பொக்ரியால்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி: ஜே.இ.இ., முதல்நிலை தேர்வுகள் இனி மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.தேசிய அளவில் உள்ள ஐஐடி(இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜே.இ.இ., தேர்வுகள் நடத்தப்படும். இவை ஜே.இ.இ., முதல்நிலை தேர்வு, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு எஜ இரு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலை தேர்வு, ஹிந்தி,
JEE exam, Ramesh Pokhriyal, languages

புதுடில்லி: ஜே.இ.இ., முதல்நிலை தேர்வுகள் இனி மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் உள்ள ஐஐடி(இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜே.இ.இ., தேர்வுகள் நடத்தப்படும். இவை ஜே.இ.இ., முதல்நிலை தேர்வு, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு எஜ இரு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலை தேர்வு, ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜே.இ.இ., முதல்நிலை தேர்வுகள், பிற மாநில மொழிகளில் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: தேசிய கல்வி கொள்கையின்படி, ஜே.இ.இ., முதல் நிலை தேர்வுகளை அதிக அளவிலான மாநில மொழிகளில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், கேள்விகளை சரியாக புரிந்து கொள்வதுடன், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X