கொரோனா ஒழிப்பில் டிரம்ப் தோல்வி - ஜோ பிடன்| Dinamalar

' கொரோனா ஒழிப்பில் டிரம்ப் தோல்வி' - ஜோ பிடன்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (8)
Share
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கொரோனாவுடன் போராடுவதற்கான திட்டங்கள் இல்லை என அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்தார்அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.,3 ம் தேதி நடக்க உள்ளது. இதனிடையே குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே இறுதி கட்ட விவாதம் நாஸ்வில்லேயில் நடந்தது.விவாதத்தில் கலந்து கொண்ட
donald trump, joe biden, president election, debate, corona, plans, டொனால்ட் டிரம்ப், ஜோ பிடென், அதிபர் தேர்தல், விவாதம், கொரோனா, திட்டங்கள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கொரோனாவுடன் போராடுவதற்கான திட்டங்கள் இல்லை என அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.,3 ம் தேதி நடக்க உள்ளது. இதனிடையே குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே இறுதி கட்ட விவாதம் நாஸ்வில்லேயில் நடந்தது.

விவாதத்தில் கலந்து கொண்ட டிரம்ப், ' அமெரிக்காவில் கொரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பல மாகாணங்களில் கொரோனா தொற்று குறைந்து காணப்படுகிறது. விரைவில் கொரோனா தடுப்பு மருந்து தயாராகி விடும். மருத்துவமனையில் இருந்த போது கொரோனா தடுப்பு மருந்தினை பெற்றேன்'


இந்தியா, ரஷ்யாவை பாருங்கள்


அமெரிக்காவில் எல்லைப்பாதுகாப்பு ஸ்திரமாக உள்ளது. காலபருவ மாற்றம் உலக அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. காற்றில் ஏற்பட்டுள்ள மாசு அமெரிக்காவில் குறைவு. : இந்தியாவை பாருங்கள், ரஷ்யா, சீனாவை பாருங்கள், அந்நாடுகளில் காற்றில் புழுதி அதிகம் உள்ளது.


இவ்வாறு தெரிவித்தார்.


latest tamil newsஇதற்கு மறுப்பு தெரிவித்த பிடன், 'வரும் மாதங்களில் அமெரிக்காவில் மேலும் பலர் கொரோனாவால் உயிரிழப்பார்கள். கொரோனாவை எதிர்த்து போராட டிரம்பிடம் திட்டமிடல் இல்லை. கொரோனாவை ஒடுக்க வேண்டும்; நாட்டினை அல்ல' இவ்வாறு அவர் விவாதித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X