சீனாவுடன் லே பகுதியை இணைப்பதா? டுவிட்டர் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சீனாவுடன் லே பகுதியை இணைப்பதா? 'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு எச்சரிக்கை

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020
Share
புதுடில்லி: லடாக்கின் லே பகுதியை, சீனாவுடன் இணைத்து காண்பித்ததற்கு, சமூக வலைதளமான, 'டுவிட்டர்' நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு கடிதம் அனுப்பியது.லடாக்கில் அமைந்துள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில், கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், நம் நாட்டுக்குச் சொந்தமான, லடாக்கின் லே பகுதியை, டுவிட்டர் நிர்வாகம், சீனாவின் ஒரு
GovernmentWarns, Twitter, Location, Settings, Showing, Leh In China, மத்திய அரசு, டுவிட்டர், எச்சரிக்கை, லே, லடாக், சீனா

புதுடில்லி: லடாக்கின் லே பகுதியை, சீனாவுடன் இணைத்து காண்பித்ததற்கு, சமூக வலைதளமான, 'டுவிட்டர்' நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு கடிதம் அனுப்பியது.

லடாக்கில் அமைந்துள்ள இந்திய - சீன எல்லைப் பகுதியில், கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், நம் நாட்டுக்குச் சொந்தமான, லடாக்கின் லே பகுதியை, டுவிட்டர் நிர்வாகம், சீனாவின் ஒரு அங்கமாக, சமீபத்தில் ஒரு வரைபடத்தை காட்டியது. இதற்கு, கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, இது தொடர்பாக, டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவுக்கு, கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:


latest tamil news


ஜம்மு - காஷ்மீரும், லடாக்கும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும். இந்திய அரசு நிர்வகிக்கும் யூனியன் பிரதேசங்களாக அவை விளங்குகின்றன. சீனாவின் இடமாக லே பகுதி சித்தரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டுவிட்டர் அதிகாரி ஜாக் டோர்சேவுக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அஜய் சானே, கடிதம் அனுப்பி வைத்தார்.

அதில், இந்திய மக்களின் உணர்வுகளை மதித்து நடக்கும்படி கூறப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை மதிக்காமல் எடுக்கும் இதுபோன்ற முயற்சிகளை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; இது சட்டவிரோதமானது. இத்தகைய முயற்சிகள், டுவிட்டர் நிர்வாகத்தின் நடுநிலைமை மற்றும் நேர்மை குறித்து சந்தேகங்களை எழுப்பும் என, அந்த கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X