"இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள். தமிழகம் தாங்குமா சாமீ..."| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள். தமிழகம் தாங்குமா சாமீ..."

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (10)
Share
எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். என் மகன், விஜயின், மக்கள் இயக்கம் தேவைப்பட்டால் அரசியல் கட்சியாக வலுப்பெறும் - இயக்குனர் சந்திரசேகர்.'இப்படி, எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்; தமிழகம் தாங்குமா சாமீ...' என, அலறத் தோன்றும் வகையில், நடிகர் விஜயின் தந்தை, இயக்குனர் சந்திரசேகர் பேட்டி.ஒருவருக்கு ஒரு முறை தான்
சந்திரசேகர், உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், குஷ்பு

எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். என் மகன், விஜயின், மக்கள் இயக்கம் தேவைப்பட்டால் அரசியல் கட்சியாக வலுப்பெறும்
- இயக்குனர் சந்திரசேகர்.


'இப்படி, எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்; தமிழகம் தாங்குமா சாமீ...' என, அலறத் தோன்றும் வகையில், நடிகர் விஜயின் தந்தை, இயக்குனர் சந்திரசேகர் பேட்டி.ஒருவருக்கு ஒரு முறை தான் அரசு பயிற்சி மையங்களில், நீட் பயிற்சி தரப்படும் என்கிறது அ.தி.மு.க., அரசு. இது, மாணவர்களை தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே. 'கோச்சிங்' செல்ல முடியாத, கிராமத்து ஏழை, எளிய பிள்ளைகள் ஒதுங்குவர். இது தான், .ஜ., - அ.தி.மு.க.,வின் கூட்டு சதி
- உதயநிதி ஸ்டாலின்.


'அரசு நடத்திய, நீட் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்ற ஒரு மாணவர் கூட, வெற்றி பெறவில்லை. அந்த விரக்தியால், அரசு இப்படி சொல்லியிருக்குமோ...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.பிரதமரின் உரை வழக்கம் போலவே ஏமாற்றம் அளிக்கிறது. இக்கட்டான காலக்கட்டத்தில், இப்படி வாய்ப்பந்தல் போடாமல், மக்களுக்கு உருப்படியான நலத் திட்டங்களை அறிவிப்பதற்கு பிரதமர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்
- திருமாவளவன்.


latest tamil news

'மழைக்காலமும், கொரோனா தாண்டவமும் சேரப் போகிறது என எச்சரிக்கை விடுத்ததை, வாய்ப்பந்தல் என அலட்சியம் செய்கிறீர்களே... களம் அறிந்து கனல் கக்குங்கள்...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.சமூகப் பாதுகாப்புடன் கூடிய, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 26ல், அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு ஊழியர்கள் கலந்து கொள்வர்
- அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் செல்வம்.


'கொரோனா ஒழியும் வரை, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என, அதிரடி உத்தரவை, அரசு பிறப்பிக்குமா... என, வேண்டும் வகையில், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் செல்வம் பேட்டி.விஜய் சேதுபதி... நீங்கள் ஒரு வலிமையான நபர். நீங்கள் இருப்பது போலவே இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வந்துள்ள அச்சுறுத்தல் காட்டுமிராண்டித்தனமானது. அது விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளியை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் -நடிகை குஷ்பு.


'பா.ஜ.,வுக்கு தாவியதை மறந்து, எல்லா பிரச்னைக்கும் வழக்கம் போல, 'வாய்ஸ்' கொடுக்கிறீர்களா; காங்., போல அல்ல பா.ஜ., 'கட்டம்' கட்டி விடும்...' என, அறிவுறுத்தத் துாண்டும் வகையில், நடிகை குஷ்பு அறிக்கை.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X