பயணங்களில் பத்திரம்: பண்டிகை காலங்களில் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயணங்களில் பத்திரம்: பண்டிகை காலங்களில் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க முடிவு

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (1)
Share
கோவை: பண்டிகை கால சிறப்பு பஸ்களை அறிவிக்கும் அரசு போக்குவரத்துக்கழகம், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, கூட்டத்திற்கு ஏற்ப பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து, மக்கள்முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் வரும், 25, 26ம் தேதிகளில் ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஞாயிறு பண்டிகை
பத்திரம்,  பண்டிகை ,காலங்கள், தேவை, பஸ்,

கோவை: பண்டிகை கால சிறப்பு பஸ்களை அறிவிக்கும் அரசு போக்குவரத்துக்கழகம், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, கூட்டத்திற்கு ஏற்ப பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து, மக்கள்முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வரும், 25, 26ம் தேதிகளில் ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஞாயிறு பண்டிகை என்பதால், இன்று முதலே பஸ் ஸ்டாண்ட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும், பயணிகள் கூட்டம் அதிகரிக்கவாய்ப்புள்ளது.பண்டிகை சமயத்தில் கோவையில் இருந்து மதுரை, தேனி போன்ற தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாண்டு கொரோனா தாக்கத்தால் உயிரிழப்புடன், பொருளாதார ரீதியான பாதிப்புகளையும், மக்கள் சந்தித்துள்ளனர்.இத்துயரம் மேலும் தொடராது, நோய் பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


latest tamil news


பஸ் போக்குவரத்தை பொறுத்தவரை, பஸ்களில் கூடுமானவரை சமூக இடைவெளியை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பஸ்சிலும், குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே அனுமதிக்கப்படுவர். நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை அறிவிக்காமல், கூட்டத்திற்கு ஏற்ப பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. பண்டிகை சமயத்தில், கூட்ட நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாக இருந்தாலும், மக்கள் பொறுப்பை உணர்ந்து தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்;நோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.

அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 40க்கும் குறைவான பயணிகளை கொண்டு பஸ்கள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆயுத பூஜைக்குசிறப்பு பஸ்களை அறிவித்திருந்தால், அதை எதிர்பார்த்துகூட்டமும் அதிகரிக்கும். எனவே, பயணிகள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க, சிறப்பு பஸ்கள் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கூட்டத்தை கண்காணித்து தகவல் தெரிவிப்பதற்கென, பஸ் ஸ்டாண்ட்களில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X