பீஹார் முன்னேற்றத்திற்கு உழைத்தோம்: பிரதமர் மோடி பிரசாரம்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சசராம்: பீஹாரின் வளர்ச்சிக்கு முந்தைய காங்., கூட்டணி அரசு இடையூறு ஏற்படுத்தியதாகவும், ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலம் முன்னேற பாடுபட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சசாராம் என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தில் பிரதமர்மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
BiharPolls,Narendramodi, Modi,  Pmmodi, பிரதமர்மோடி, பீஹார்தேர்தல்,

சசராம்: பீஹாரின் வளர்ச்சிக்கு முந்தைய காங்., கூட்டணி அரசு இடையூறு ஏற்படுத்தியதாகவும், ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலம் முன்னேற பாடுபட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சசாராம் என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தில் பிரதமர்மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ராம்விலாஸ் பாஸ்வானுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்ககளை பீஹார் அரசு சிறப்பாக கையாண்டது. நாட்டுடன் இணைந்து கொரோனா அச்சுறுத்தலை மக்கள் தைரியத்துடன் எதிர் கொண்டனர். பீஹாரின் வளர்ச்சிக்கு நிதிஷ்குமார் கடுமையாக உழைத்தார்.

பீஹாரில், மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டுப்போட முடிவு செய்துவிட்டனர். இதனால், எந்த வதந்திகளும் வெற்றியை பாதிக்காது. அனைத்து கருத்து கணிப்புகளும் தேஜ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவிக்கின்றன. அரசு வேலையை விற்றவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும். தொழில்கள் எளிதாக நடக்க வங்கிக்கடன் எளிதில் வழங்கப்படுகிறது.


latest tamil newsகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்கள் போல் செயல்படுகின்றன. இடைத்தரகர்களிடம் இருந்து நாட்டை தேஜ அரசு பாதுகாத்துள்ளது. ஆனால், இந்தியாவை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. தே.ஜ., கூட்டணி ஆட்சியில் பீஹார் இரட்டை என்ஜீன் கொண்டதாக திகழ்கிறது. மாநிலத்தில் மின்சார நுகர்வு 3 மடங்கு அதிகரித்துள்ளது. மின்சாரம் மற்றும் மருத்துவ வசதி அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது. புது சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

15 ஆண்டுகளாக மாநிலத்தை எதிர்க்கட்சிகள் கொள்ளையடித்தன. பீஹாரில் காட்டாட்சிக்கான காலம் முடிந்துவிட்டது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்,நிதிஷ்குமார் ஆட்சியை வீணடித்ததுடன், மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல தடைகளை ஏற்படுத்தியது. எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால், மாநிலம் முன்னேற்றத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக உழைத்தது.

தேஜ ஆட்சியில் தான் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. மின்சார திட்டங்கள் விரைவில் துவங்க உள்ளன. இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-அக்-202015:44:09 IST Report Abuse
Dr. Suriya நிதீஷ் ரயில்வே அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த திட்டங்கலால் தான் ரயில்வே லாபம் ஈட்டியது.. ஆனா பாருங்க பேர் எடுத்தது மாட்டு தீவன குற்றவாளி......
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
23-அக்-202014:51:06 IST Report Abuse
A.Gomathinayagam பீகார் மக்கள் தான் அங்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இன்று இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலார்கள்
Rate this:
Cancel
23-அக்-202013:30:58 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நல்லாட்சி கொடுத்திருந்தால் நிச்சயம் பிஹார் மக்கள் ஆதரிப்பார்கள் , மாட்டு தீவனத்தில் ஊழல் செய்த கட்சியை மக்கள் நிராகரிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X