பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மின்சார ரயில் சேவையை துவக்க வேண்டும்: முதல்வர்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மின்சார ரயில்சேவையை துவக்க வேண்டும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில், மாநிலத்திற்குள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் ரயில் சேவையை தெற்கு ரயில்வே துவக்கியுள்ளது. அதேபோல், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மெட்ரோ ரயில்
மின்சாரயில், சென்னை, முதல்வர்பழனிசாமி,  பியூஷ்கோயல், ரயில்வேஅமைச்சர்,

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மின்சார ரயில்சேவையை துவக்க வேண்டும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில், மாநிலத்திற்குள்ளேயும், மாநிலத்திற்கு வெளியேயும் ரயில் சேவையை தெற்கு ரயில்வே துவக்கியுள்ளது. அதேபோல், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவையையும் துவக்க தமிழக அரசும் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2ம் தேதி, சென்னை மற்றும் புறநகரில் இயங்கும் மின்சார ரயில் சேவையை துவக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.


latest tamil news




மின்சார ரயில் சேவையை துவக்கினால், பொது மக்களுக்கு பெரிதளவில் பயனுள்ளதாக இருப்பதுடன், பொருளாதாரம் விரைவில் மீள உதவும். இதனால், சென்னை மற்றும் புறநகரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மின்சார ரயில் சேவையை துவக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
23-அக்-202022:55:52 IST Report Abuse
S. Narayanan மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
23-அக்-202014:39:45 IST Report Abuse
 rajan தீபாவளி பண்டிகை வருவதால் அவசியம் புறநகர் ரயில் சேவை தேவை... அப்போதுதான் வழக்கம்போல் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா வின் ஆட்டமும் அதிகரிக்கும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
23-அக்-202014:07:17 IST Report Abuse
தமிழ்வேள் மா போ க அடிக்கும் கொள்ளை கொஞ்சம் குறையும். ஸ்டேஜ் குறைத்து போட்டு பயணக்கட்டணம் அதிகரித்தது ஒரு கொள்ளை. அனைத்து பசுக்களையும் டீலக்ஸ் ஆக இயக்குதல் அடுத்த கொள்ளை தாம்பரம் - பாரிமுனை ஒருமுறை சென்று திரும்ப ரூபாய் என்பது [80] கட்டணம் என்பது பகல் கொள்ளை. மின்சார புறநகர் ரயில் கட்டணம் ரூபாய் 20 [இருபது] மட்டுமே. என்ன ஒரு பகல் கொள்ளை .....இந்த கொள்ளை தடுக்கப்பட மின்ரயில் சேவை அவசியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X