பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,28 ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020
Share
Advertisement
சென்னை: அக்., 28 ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: கடலோரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களை பொறுத்த வரை வட
வடகிழக்குபருவமழை, பாலசந்திரன்

சென்னை: அக்., 28 ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: கடலோரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களை பொறுத்த வரை வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



தமிழகம் மற்றும் ஆந்திரா கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில், வடகிழக்கு திசையில் காற்று வீச துவங்கும் நிலையில், வடகிழக்கு பருவமழையானது, தமிழகம், தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயல்சீமா பகுதிகளில் அக்.,28 ம் தேதியை ஒட்டி துவக்கக்கூடும். வடகிழக்கு பருவமழை, வட மாவட்டங்களில் இயல்பாகவும், தென் மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X