பீஹாருக்கு எதுவும் செய்யாத பாஜ., அரசு: ராகுல்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: பாஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பீஹாருக்கு எதுவும் செய்யவில்லை என பீஹாரில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் காங்., எம்பி., ராகுல் பேசினார்.பீஹாரில் வரும் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், நவாடா மாவட்டம் ஹிசுவாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் காங்., எம்.பி ராகுல் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ்
Rahul, BiharElections, NDA, Government, DidNothing, ராகுல், பிரசாரம், பீஹார், தேர்தல்

புதுடில்லி: பாஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பீஹாருக்கு எதுவும் செய்யவில்லை என பீஹாரில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் காங்., எம்பி., ராகுல் பேசினார்.

பீஹாரில் வரும் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், நவாடா மாவட்டம் ஹிசுவாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் காங்., எம்.பி ராகுல் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: பாஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பீஹாருக்கு எதுவும் செய்யவில்லை. பீஹார் மக்களிடையே பிரதமர் மோடி பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த தேர்தலின்போது 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக்கூறிய அவர், பீஹார் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினாரா?


latest tamil news


நீங்கள் உங்கள் பணத்தை வங்கிகளில் வைக்கவில்லை; பணக்காரர்களின் பைகளில் வைத்துள்ளீர்கள். கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராடச் சொன்னார்கள். ஆனால் அதானி போன்றோர்கள் வங்கி வரிசையில் நிற்பதை நீங்கள் பார்த்தீர்களா?

ராணுவம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக நான் தலை வணங்குகிறேன் என பிரதமர் கூறுகிறார். ஆனால், அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே அவர் விசுவாசமாக செயல்படுகிறார். சீன ராணுவம் நமது 20 வீரர்களை கொன்று, இந்தியாவின் 1200 கிலோமீட்டர் நிலத்தை கையகப்படுத்தியது. சீனா எங்கள் நிலத்திற்குள் ஊடுருவியபோதும், யாரும் இந்திய எல்லைக்குள் வரவில்லை என, நமது பிரதமர் வீரர்களை அவமதித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
23-அக்-202021:33:00 IST Report Abuse
a natanasabapathy பேப்பர் படிப்பதில்லையா ராகுல் கான் பல ஆயிரம் கோடி திட்டங்களை பிஹாரில் செயல் படுத்தப்பட்டு வருவது உங்கள் கண்ணுக்கு தெரிய வில்லை போலும்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
23-அக்-202021:07:30 IST Report Abuse
Loganathan Kuttuva நிதிஷ் ஆட்சியில் தான் பிஹாரில் குற்றங்கள் குறைந்து மக்கள் நிம்மதியாக உள்ளனர்.
Rate this:
23-அக்-202023:50:41 IST Report Abuse
ஆப்புநிதீஷ் ஆட்சியில் பிஹாரிகளை தென்னிந்தியாவுக்கு ஓட்டி உட்டு இங்கே குற்றங்கள் அதிகமாயிருச்சு. இது ஒரு சாதனை....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-அக்-202020:08:13 IST Report Abuse
Ramesh Sargam காங்கிரஸின் அறுபது வருட ஆட்சியில் நீங்கள் என்ன செய்தீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X