அடுத்த சில மாதங்களில், உலக கவனம் இந்திய மருந்து தயாரிப்பு அமைப்புகள் மீது திரும்பும் என்கிறார், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரியான மார்க் சுஸ்மேன். இன்று கொரோனா தடுப்பு ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் மருந்துகள், தற்போது இந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த மருந்துகளில் செயல்திறன் மிக்கவை எவை என்பதை பல கட்ட சோதனைகள் உறுதி செய்ததும், அத்தனை மருந்துகளும் இந்தியாவிலிருந்து கிளம்பி உலக நாடுகளுக்குச் செல்லவிருக்கின்றன. இந்த இடத்தில் தான் இந்தியா மிக முக்கியமான செயலாற்றவுள்ளது என, சுஸ்மேன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, உலக நாடுகள் அனைத்திருக்கும் சம அளவில் கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்கிறார், சுஸ்மேன்.
குறிப்பாக, வளரும் நாடுகளுக்கு, தேவையான கொரோனா தடுப்பூசிகள் சென்று சேருவதை இந்தியாவின் மருந்து அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என, அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, ஆராய்ச்சி மற்றும் தகவல் பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு, 927 கோடி ரூபாய் நிதியை கேட்ஸ் அறக்கட்டளை நல்கியுள்ளதாக சுஸ்மேன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE