அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல் புரசல் அரசியல்: தி.மு.க.,வின் ‛கவர்ச்சி' தேர்தல் அறிக்கை

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
சட்டசபைத் தேர்தல்ல, தி.மு.க., தேர்தல் அறிக்கைதான் பேசப்படணும்னு, ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்காராம்... தேர்தல் அறிக்கைத் தயாரிப்பு குழு தலைவர் டி.ஆர்.பாலு, உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிச்சப்ப, பொதுமக்கள், கட்சிக்காரங்களை சந்திச்சு, கருத்து கேட்கலாம்னு சொல்லியிருக்காரு. அதனால, அறிக்கைத் தயாரிப்புக் குழு, விரைவில் மாவட்டம் மாவட்டமா போய், மக்களையும், கட்சியினரையும்
அரசல் புரசல் அரசியல், திமுக, தி.மு.க., தேர்தல் அறிக்கை, கவர்ச்சி,  டி.ஆர்.பாலு, ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், தளபதி ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின்,  பாஜ, பா.ஜ., அண்ணாமலை,  ஜே.பி.நட்டா, பீஹார்,

சட்டசபைத் தேர்தல்ல, தி.மு.க., தேர்தல் அறிக்கைதான் பேசப்படணும்னு, ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்காராம்... தேர்தல் அறிக்கைத் தயாரிப்பு குழு தலைவர் டி.ஆர்.பாலு, உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிச்சப்ப, பொதுமக்கள், கட்சிக்காரங்களை சந்திச்சு, கருத்து கேட்கலாம்னு சொல்லியிருக்காரு. அதனால, அறிக்கைத் தயாரிப்புக் குழு, விரைவில் மாவட்டம் மாவட்டமா போய், மக்களையும், கட்சியினரையும் சந்திச்சு கருத்து கேட்டு, ஏராளமான இலவசங்களுடன், ‛கவர்ச்சி' தேர்தல் அறிக்கையை தயாரிக்க போறாங்களாம்...!


அசத்தும் அண்ணாமலை


latest tamil news


விரைவில் நடக்க இருக்குற முத்தரை சங்க செயற்குழு கூட்டத்துக்கு, பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவை அழைச்சுட்டு வர்றதா, பா.ஜ., துணைத்தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்காரு... ஜே.பி.நட்டா வந்தா, அரசியல் ரீதியா தங்கள் சமூகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும்னு முத்தரையர் சங்கத்தினர் நினைக்கிறாங்க. அண்ணாமலையோட இந்த ஏற்பாட்டால, அவர் மேல ஈர்ப்பாகி, புகழ்பாடும் முத்தரையர் சங்கத்தினர், டெல்டா மாவட்டங்களில் அவர் போட்டியிட கோரிக்கை வைச்சிருக்காங்க...!


பீஹாருக்கு பறந்த தேர்தல் வியூக வகுப்பாளர்


பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணிக்காக, ‛மாற்றம்... முன்னேற்றம்...' என்ற ஸ்லோகத்துடன், தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தவர், ஜான் ஆரோக்கியசாமி... மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிஷ் டோங்கே என்பவருடன் ஜே.பி.ஜே., என்ற நிறுவனத்தை நடத்தி வர்ற ஜான் ஆரோக்கியசாமி, பல கட்சிகளுக்கும் வியூகம் வகுத்துக் கொடுத்திருக்காரு. அவரை, ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார், பீகார் தேர்தலுக்காக, வியூகம் வகுக்கும் பணியைக் கொடுத்திருக்காரு. அதனால, அவர் பீஹாருக்கு பறந்திருக்காரு...!

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
24-அக்-202006:20:51 IST Report Abuse
Indhuindian அப்போ மானாட மயிலாட சீன்லாம் போட்டோவா இருக்குமா இல்லே வீடியோவா இருக்குமா? விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னு முளைக்குமா என்ன?
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
24-அக்-202005:54:13 IST Report Abuse
blocked user திமுகவை நிரந்தரமாக தரையிரக்க பிகே என்ற பிராமணன் முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறார்....அதேபோல கொள்கையில்லாத கட்சிகளை எவ்வளவுத்தான் வண்ணம் பூசி அலங்கரித்தாலும் அவற்றால் பொது மக்களுக்கோ அல்லது நாட்டுக்கோ பயனில்லை.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
24-அக்-202005:46:14 IST Report Abuse
RaajaRaja Cholan திமுக காரன் கொடுக்கும் ஸ்டில்ஸ் சினிமாக்காரன் கொடுப்பதை விட அதி பயங்கர மேக்கப் உடன் நாடக காரன் போல உள்ளதே , இளமை திரும்புதோ அழகனுக்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X