அனாவசியமாக எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் - கனடாவுக்கு சீனா எச்சரிக்கை

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
பெய்ஜிங்: சீனா, கனடாவுக்கும் தற்போது கருத்து முரண்பாடு காரணமாக கடும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் சமீபகாலங்களில் பலவிதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்கள் சீன கம்யூனிச அரசால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. சீனா தனது
China, Warns, Canada, DamageRelations, Uyghur, GenocideIssue, சீனா, கனடா, எச்சரிக்கை, உய்குர்

பெய்ஜிங்: சீனா, கனடாவுக்கும் தற்போது கருத்து முரண்பாடு காரணமாக கடும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் சமீபகாலங்களில் பலவிதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்கள் சீன கம்யூனிச அரசால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. சீனா தனது அதிகரித்துவரும் மக்கள் தொகையை குறைக்க இந்த பழங்குடி இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்கிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. இதனையடுத்து தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு கைத்தொழில்கள் கற்றுக்கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிவைத்து உள்ளதாகவும் சீனா தெரிவித்தது.ஆனாலும் தொடர்ந்து சீனா மீது இந்த பழங்குடி மக்கள் குற்றச்சாட்டு, மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பி வந்த வண்ணமே இருந்தது.


latest tamil news




இந்நிலையில் தற்போது கனடா நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. அப்போது அடிமைகளின் கூடாரங்களில் பழங்குடி மக்கள் அடைத்து வைக்கப்படுகிறார்கள் என்ற வார்த்தை அங்கு பிரயோகிக்கப்பட்டது. இதற்கு சீன வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அனாவசியமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை சீனா மீது சுமத்தி தங்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என சீனா, கனடாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
24-அக்-202005:48:13 IST Report Abuse
blocked user சீன கம்மிகளுக்கு யாரை மிரட்டுவது என்ற ஒரு வரைமுறையே கிடையாது... இனி ஒரு சீனா கொள்கைக்கு எதிர்ப்பு என்று கனடாவும் முன்வரவேண்டும்...
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
24-அக்-202003:27:30 IST Report Abuse
NicoleThomson கனடா சும்மா சீண்டி விடும் அமெரிக்காவின் அல்லக்கை அல்லவா
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
23-அக்-202023:50:16 IST Report Abuse
பிரபு "தங்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என சீனா, கனடாவுக்கு எச்சரிக்கை" - சீனா எதாவது புதுசா வைரஸை கைல வைச்சுருக்காங்களோ?. பல நாடுகள் துணையா வைச்சிருக்கிற கனடாவுக்கே எச்சரிக்கை விடுறாங்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X