அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி என்பது அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல: கமல் விமர்சனம்

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து எனவும், இது அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல என்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. தடுப்பூசிக்கான இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வரும்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலுக்காக பாஜ., சார்பில் நேற்று (அக்.,22) வெளியான தேர்தல்
MNM, KamalHaasan, CoronaVaccine, BJP, ADMK, மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன், கொரோனா, தடுப்பூசி, வாக்குறுதி

சென்னை: தடுப்பூசி என்பது உயிர்காக்கும் மருந்து எனவும், இது அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல என்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. தடுப்பூசிக்கான இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வரும்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலுக்காக பாஜ., சார்பில் நேற்று (அக்.,22) வெளியான தேர்தல் வாக்குறுதியில், ‛பீஹாரில் பாஜ., வெற்றிப் பெற்றால், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்,' என அறிவிக்கப்பட்டது. இதனை பலரும் விமர்சித்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், ‛கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்' என தெரிவித்தார்.


latest tamil news



இந்நிலையில், பாஜ., மற்றும் அதிமுக அரசுகளின் இந்த அறிவிப்பு குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டதாவது: நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல. மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
24-அக்-202007:37:34 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு இன்றைய..கோடம்பாக்கம் ஜோக்கர்களை அரசியலில் விட்டால் என்ன துரதிர்ஷ்டம் என்பதினை உணர்த்தும் மகா கேவல உலக நடிகனின் உளறல்களை தூர தூக்கிப்போட வேண்டிய நேரம்.. நீங்க உடனே கேட்கலாம்.. ஜெயலலிதா..எம் ஜி ஆர் கோடம்பாக்கம் லேர்ந்து தானே வந்தாங்கன்னு.. அவங்க கால அரசியல் ஒரு அளவுக்கு ஒப்புக்கொள்கிற மாதிரி இருந்தது ..,இப்போ இருப்பது.. வெளிநாட்டில் இருந்து காசு வாங்கி மேடை பேச்சு அரசியல்.. அதன் உள்நோக்கம் வேறு திசையில் எங்கோ ஆட்டி படைக்க நினைக்கிறது மத தவெஷிகளின் சாக்கடை அரசியல் .
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
24-அக்-202006:15:48 IST Report Abuse
Indhuindian உலக நாயகரே தடுப்பூசி இலவசமா போடுவோம்ன்னு சொன்ன அது ஏழ்மையுடன் விளையாடுவதா? அன்னிக்கி ரூவாய்க்கு மூணு படின்னு சொல்லி அப்புறம் முதலில் ஒரு படி படிப்படியாக மூணு படின்னு சொல்லி மக்களுக்கு மூணு நாமத்தை பட்டயா போட்டவங்க ஏழ்மையுடன் விளையாடினாங்களா? அப்போ என்ன சொல்லணும் தடுப்பூசி காசு வாங்கிட்டுதான் போடபோறோம்னா? உங்க கனவு ஆட்சியிலே அந்தமாதிரி கூவி ஒட்டு வாங்கலாமே
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
24-அக்-202006:13:47 IST Report Abuse
Allah Daniel இதே வாயை வச்சிக்கிட்டு...சுடலையை பார்த்து ‘நகை கடன் ரத்து, ஆளுக்கு 2 ஏக்கர் நிலம், சாராய ஆலைகள் மூடுதல்’னு சொன்னியே செஞ்சியானு கேளுங்க பாப்போம்..உங்க டொலர் கேரளாவில் தங்கம் கடத்துறான்...அதையாவது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X