பொது செய்தி

இந்தியா

நவ., 17 முதல் கல்லூரிகள் திறப்பு: கர்நாடகா அறிவிப்பு

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பெங்களூரு: பொறியியல், டிப்ளமோ, கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் நவ., 17 முதல் திறக்கப்படும் என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக மார்ச் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 7 மாதங்களாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. முக்கியமான செமஸ்டர் தேர்வுகளும் பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது.
Karnataka, Colleges, Reopen, Degree, Diploma, Engineering, Nov17, கர்நாடகா, கல்லூரிகள், திறப்பு

பெங்களூரு: பொறியியல், டிப்ளமோ, கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் நவ., 17 முதல் திறக்கப்படும் என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மார்ச் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 7 மாதங்களாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. முக்கியமான செமஸ்டர் தேர்வுகளும் பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இதனால் கல்வி தரம் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. 2020 செட் மாணவர்களை கொரோனா பேட்ச் என்று அடையாளப்படுத்தி இணையத்தில் கிண்டலடித்தனர். இந்த நிலையில் கல்லூரிகள் திறப்பது பற்றி இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் நவ., 17 முதல் அனைத்து கல்லூரிகளையும் திறப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது பற்றி செய்தியாளர்களிடம் துணை முதல்வர் அஸ்வத் நாராயண் கூறியதாவது: நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம் அல்லது கலந்தும் பங்கேற்கலாம். கல்லூரிகளுக்கு வந்து வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்து, எத்தனை பிரிவாக வகுப்புகள் நடத்துவது என தீர்மானிக்கப்படும். தேவையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் அனைத்தும் முடிவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
24-அக்-202003:30:13 IST Report Abuse
NicoleThomson முதலில் அரசு கல்லூரிகளில் இன்ப்ராஸ்டைரக்சர் ரெடி பண்ணுங்க உன்னோட விதான சவுதா பக்கத்துல இருக்குற காலேஜுலயே இன்டர்நெட் வசதி சரி இல்லை எப்படி ஆசிரியர்கள் ஆன்லைன் க்ளாஸ் எடுக்குறாங்க என்பது பல் இளிக்குது
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
23-அக்-202022:37:05 IST Report Abuse
S. Narayanan தைரியமான முடிவு. எவ்வளவு நாள் பொருத்திப்பது. மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாட்டுடன் செயல் படவேண்டும்.
Rate this:
Cancel
Dr.P.Manivannan - Karur,இந்தியா
23-அக்-202020:45:26 IST Report Abuse
Dr.P.Manivannan கடந்த 8 மாதம் தனியார் கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கவில்லை. இப்போது மானவர்களை online அல்லது வகுப்பறையில் இருந்து பாடம் கற்றுக்கெடுக்கா செல்லுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X