பொது செய்தி

இந்தியா

பேஸ்புக் நிர்வாகியிடம் பார்லி குழு விசாரணை

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020
Share
Advertisement
புதுடில்லி: தகவல் பாதுகாப்பு தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் பொது கொள்கை தலைவர் (இந்தியா, தெற்கு மற்றும் ஆசியா பிரிவு) தலைவர் அன்கி தாசிடம் பார்லி குழு விசாரணை நடத்தியது. சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.இந்த விசாரணையின் போது பேஸ்புக் நிர்வாகிகளிடம் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், வணிக ரீதியிலான லாபத்திற்காக பயனாளர்களின் தகவல்களில்
பேஸ்புக், பார்லிமென்ட், விசாரணை

புதுடில்லி: தகவல் பாதுகாப்பு தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் பொது கொள்கை தலைவர் (இந்தியா, தெற்கு மற்றும் ஆசியா பிரிவு) தலைவர் அன்கி தாசிடம் பார்லி குழு விசாரணை நடத்தியது. சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

இந்த விசாரணையின் போது பேஸ்புக் நிர்வாகிகளிடம் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், வணிக ரீதியிலான லாபத்திற்காக பயனாளர்களின் தகவல்களில் தலையிடக்கூடாது என பார்லிக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். தகவல் பாதுகாப்புக்காக, பேஸ்புக் நிறுவனம் தனது வருமானத்தில் எவ்வளவு செலவு செய்கிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. விளம்பரம், வருமானம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக பயனாளர்களின் தனிப்பட்ட முறையில் தகவல்களை தாங்கள் பயன்படுத்துவதில்லை என பேஸ்புக் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பார்லி குழு விசாரணையின் போது, 300 மில்லியன் பயனாளர்களை கொண்ட இந்தியாவில், பேஸ்புக் நிறுவனம் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது, அதற்கு எவ்வளவு வரி செலுத்துகிறது எனவும் கேள்வி எழுப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news


இதனிடையே, அமேசான் மற்றும் டுவிட்டர் நிறுவன அதிகாரிகள் வரும் 28 ம்தேதியும், கூகுள் மற்றும் பேடிஎம் நிறுவன அதிகாரிகள் வரும் 29ம் தேதி ஆஜராக பார்லி கூட்டுக்குழு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், அமேசான் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது நிறுவன அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என்பதால், 28ல் நடக்கும் பார்லி குழு விசாரணையில் பங்கேற்க இயலாது என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X