நல்ல திட்டங்களை எதிர்ப்பதா: எதிர்க்கட்சிகள் மீது மோடி பாய்ச்சல்

Updated : அக் 25, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
பாட்னா: ''நாட்டு நலன் கருதி எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை எதிர்ப்பதையே ஒரே நோக்கமாக வைத்து, எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 28ல் துவங்கி, மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. உழைப்பு தான்
நல்ல திட்டங்கள், எதிர்ப்பு, எதிர்க்கட்சிகள், மோடி  பாய்ச்சல்

பாட்னா: ''நாட்டு நலன் கருதி எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை எதிர்ப்பதையே ஒரே நோக்கமாக வைத்து, எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 28ல் துவங்கி, மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.


உழைப்பு தான் காரணம்இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பீஹாரில் தேர்தல் பிரசாரத்தை நேற்று துவக்கினார்.சாசாராம் மற்றும் கயாவில் நடந்த பிரசார கூட்டங்களில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி பேசியதாவது:பீஹார் சமீபத்தில், தன் இரண்டு மகன்களை இழந்துள்ளது. தன் வாழ்நாள் முழுதும், ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடிய ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு, ஈடு செய்ய முடியாதது. முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் மறைவு, பீஹாருக்கு பெரும் இழப்பு. அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, பீஹார் அரசு சிறப்பாக செயல்படுத்தியது. அதன் பலனாக, கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.பின்தங்கிய மாநிலத்திலிருந்து, வளர்ச்சியடைந்து வரும் மாநிலமாக பீஹார் மாறியுள்ளதற்கு, முதல்வர் நிதிஷ் குமாரின் கடுமையான உழைப்பு தான் காரணம்.

அதனால், பீஹார் மக்கள், தே.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டனர். எந்த வதந்தியும், பொய் பிரசாரமும், வெற்றியை பாதிக்காது. நாட்டு நலனுக்காக எந்த திட்டத்தை அறிவித்தாலும், அதை எதிர்ப்பதையே ஒரே நோக்கமாக வைத்து, எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன.
சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதால் தான், 70 ஆண்டாக, இந்தியாவிடமிருந்து, ஜம்மு - காஷ்மீர் தனித்து இருந்தது. தற்போது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், ஜம்மு - காஷ்மீர், இந்தியாவுடன் முழுமையாக இணைந்துள்ளது. அங்கு பயங்கரவாதம் ஒழிந்து, அமைதி திரும்பி வருகிறது. ஜம்மு - காஷ்மீர் மக்கள், இதை நன்கு உணர்ந்துள்ளனர்.

இதை, எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அதனால் தான், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்க வேண்டும் என, அவர்கள் புலம்பி வருகின்றனர்.


மறந்து விடக் கூடாதுசமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியவை. எதிர்க்கட்சிகள் அந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடி, இடைத்தரகர்களையும், புரோக்கர்களையும் பாதுகாக்கின்றன.எதிர்க்கட்சியினர், இடைத்தரகர்கள் போல் செயல்படுகின்றனர். இடைத் தரகர்களிடம் இருந்து நாட்டை, தே.ஜ., கூட்டணி அரசு பாதுகாத்துள்ளது.

பீஹாரில், நிதிஷ் குமார் தலைமையில், தே.ஜ., கூட்டணி ஆட்சி வந்தபின், மக்கள் அச்சமில்லாமல் வாழ்கின்றனர். குற்றங்கள் குறைந்துள்ளன. தற்போதுள்ள அரசு, இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்டது. மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மத்திய அரசும் இணைந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளன.
சூரியன் மறைந்துவிட்டால், பீஹாரில் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சமடைந்த காலத்தை, பெண்கள் மறந்து விடக் கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.


சொல்வதெல்லாம் பொய்ராகுல் சரமாரி புகார்பீஹாரின் நவடா மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: தே.ஜ., கூட்டணி அரசு, பீஹாருக்கு எதுவும் செய்யவில்லை. பீஹார் மக்களிடையே, பிரதமர் மோடி பொய் பிரசாரத்தை செய்து வருகிறார். கடந்த தேர்தலின் போது, இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கூறிய அவர், பீஹார் மக்களுக்கு என்ன வேலை வாய்ப்பு வழங்கினார் என, தெரியவில்லை.'ராணுவம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக தலை வணங்குகிறேன்' என, பிரதமர் கூறுகிறார். ஆனால், அம்பானி
மற்றும் அதானிக்கு மட்டுமே, அவர் விசுவாசமாக செயல்படுகிறார். நம் எல்லையில் இருந்து, சீன வீரர்களை எப்போது விரட்டியடிக்கப் போகிறீர்கள் என, பிரதமரை கேட்கிறேன்; அதற்கு, அவரிடம் பதில் இல்லை. எங்கு சென்றாலும், பொய் மட்டுமே பேசுகிறார், பிரதமர் மோடி. விவசாயி, தொழிலாளர்களை ஆதரிப்பது போல் பேசும் மோடி, உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-202017:21:33 IST Report Abuse
babu திட்டங்களை மக்கள் வாக்கெடுப்புக்கு விடலாமே இந்த டிஜிட்டல் யுகத்தில். ஆதாருடன் கைரேகையை இணைக்கலாமே. அதிகாரத்தில் இருந்து கொண்டு அரசியல் விளையாட்டு ஆடுவது யார்?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-அக்-202013:51:22 IST Report Abuse
Rafi உலக வரலாற்றில் பத்திரிக்கையாளர்களை கண்டு பாய்ந்தோடும் பிரதமர் இவர் மட்டுமே, விளம்பரம் கொடுத்து பேசும் மன்கிபாத் கூட இவருக்கு எதிரான டிஸ் லைக் அதிகரிப்பதை கண்டு கலக்கத்தில் இருக்கின்றார். எதிரான கருத்துக்களின் உண்மை தன்மையை ஏற்க முன்வருவதில்லை. பாராளுமன்றத்தில் கூட விவாதம் செய்ய முன்வருவதில்லை.
Rate this:
Cancel
24-அக்-202013:42:40 IST Report Abuse
Ganesan Madurai பப்பூவின் லேடஸ்ட் உளரலான "சீனா 1200 கிலோ மீட்டருக்கு சீன எல்லையிலிருந்து நமது பகுதிக்குள் ஊடுருவி பிடித்துள்ளது"படி தில்லி இமாசல பிரதேசம் உத்ராகண்ட் ஹரியானா மேற்கு உத்தர பிரதேசம் என எல்லாமே இப்ப சீனாவின் ஆக்கிரமிப்பில்😂😂😂...ஆனா இவனோட காமவெறியன் தாத்தன் தங்கத்தட்டில் வச்சு 45 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை சீனாவிடம் கொடுத்து இந்த பிறவி முட்டாப்பய தெரியாத மாதிரி நடிக்குறானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X