சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,23) அதிகபட்சமாக சென்னையில் 1,308 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.79 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

பாதிப்பு
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 844 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 1,94,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 280 பேருக்கும், செங்கல்பட்டில் 186 பேருக்கும், சேலத்தில் 185 பேருக்கும், திருவள்ளூரில் 168 பேருக்கும், திருப்பூரில் 130 பேருக்கும், ஈரோடில் 106 பேருக்கும், நாமக்கலில் 95 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 87 பேருக்கும், தஞ்சாவூரில் 78 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
உயிரிழப்பு
இன்று சென்னையில் 11 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும், கோவை, திருவள்ளூர், திருப்பூரில் தலா 2 பேரும், வேலுார், திருநெல்வேலி, துாத்துக்குடி,திருவாரூர், திருவண்ணாமலை, சேலம், புதுக்கோட்டை, நாகை, கிருஷ்ணகிரி,ஈரோடு, திண்டுக்கல், கடலுாரில் தலா ஒருவரும் என 33 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,308 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,79,931 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 282 பேரும், கோவையில் 273 பேரும், சேலத்தில் 195 பேரும், திருவள்ளூரில் 172 பேரும், காஞ்சிபுரத்தில் 145 பேரும், ஈரோடில் 104 பேரும், திருவாரூரில் 101 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE