போபால் : மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் தாய் மற்றும் சகோதரியை, தரக்குறைவாக விமர்சித்த, பா.ஜ., பெண் அமைச்சரின் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிப்பர், இமர்த்தி தேவி. இவர், சமீபத்தில், காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.
வீடியோ
இவரைப் பற்றி, முன்னாள் முதல்வரும், மூத்த காங்., தலைவருமான கமல்நாத், சமீபத்தில் விமர்சிக்கையில், தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தினார்; இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.கமல்நாத்துக்கு எதிராக, தேசிய பெண்கள் கமிஷன் உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகளில், பா.ஜ., புகார் அளித்தது.இது குறித்து, 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கும்படி, கமல்நாத்துக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கமல்நாத் குறித்து, அமைச்சர் இமர்த்தி தேவி பேசும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானது.அதில், அவர் பேசியதாவது:கமல்நாத் வங்காளத்தை சேர்ந்தவர். முதல்வர் பதவியை அனுபவிப்பதற்காகவே இவர், ம.பி., வந்தார். எப்படி பேசவேண்டும் என்பது கூட இவருக்கு தெரியவில்லை. முதல்வர் பதவியை இழந்த பின், மனப்பக்குவத்தை இழந்துவிட்டார். இவரது தாயும், சகோதரியும், மோசமான நடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
அப்போது, கமல்நாத் பயன்படுத்திய, அதே தரக்குறைவான வார்த்தையை, இவரும் பயன்படுத்தினார்; இது, ம.பி., அரசிய லில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புகார்
இதற்கிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர் கிர்ராஜ் தான்டோதியா என்பவர் பேசுகையில், ''இதே கருத்தை கமல்நாத், எங்கள் பகுதியில் பேசியிருந்தால், அவரை இந்நேரம் கொன்றிருப்போம்,'' என்று கூறினார்.இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம், காங்., தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். ம.பி.,யில், 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE