பொது செய்தி

தமிழ்நாடு

வெலிங்டன் ராணுவ மையம் வந்து சேர்ந்த பழமையான பீரங்கி

Added : அக் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
குன்னுார்: குன்னுார் ராணுவ பயிற்சி மையத்துக்கு, புனேயில் இருந்து வந்த பீரங்கி இன்று (23ம் தேதி) 3 கிரேன்கள் மூலம் இறக்கி வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ராணுவ பகுதியில், பீரங்கிகள், சிறிய விமானங்கள் உட்பட

குன்னுார்: குன்னுார் ராணுவ பயிற்சி மையத்துக்கு, புனேயில் இருந்து வந்த பீரங்கி இன்று (23ம் தேதி) 3 கிரேன்கள் மூலம் இறக்கி வைக்கப்பட்டது.



latest tamil news


நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ராணுவ பகுதியில், பீரங்கிகள், சிறிய விமானங்கள் உட்பட போரில் பயன்படுத்தியவை காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news



1959 ம் ஆண்டிற்கு பிறகு நடந்த போர்களில் பயன்படுத்திய 40 டன் கொண்ட இந்த பீரங்கி, புனேயில் இருந்து, கடந்த 9 நாட்களுக்கு முன், பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டது. கூடலுாரில இருந்து ஊட்டி வழியாக குன்னுாருக்கு கொண்டு வர முடியாததால், கடந்த 2 நாட்களாக கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்ட மற்றொரு லாரியில் இன்று அதிகாலை, கிரேன்கள் மூலம் ஏற்றப்பட்டு, ஊட்டி, அருவங்காடு, மானெக்ஷா பிரிட்ஜ் வழியாக, எம்.ஆர்.சி., கொண்டு வரப்பட்டது. 3 ராட்சத கிரேன்கள் மூலம் ராணுவ பகுதியில், தளத்தில் இரவு 7:30 மணிக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து பொலிவு படுத்தும் பணிகள் நடக்க உள்ளது

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
24-அக்-202009:31:17 IST Report Abuse
மூல பத்திரம் ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X