இதே நாளில் அன்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 23, 2020
Share
அக்., 24, 1921கர்நாடக மாநிலம், மைசூரில், 1921 அக்., 24ம் தேதி பிறந்தவர், ராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் என்ற ஆர்.கே.லட்சுமண். இவரின் சகோதரர், பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன்.ஆர்.கே.லட்சுமண் முதலில், கன்னட நகைச்சுவை இதழான, 'கோரவஞ்சி'யில், கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின், 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக 'கார்ட்டூனிஸ்ட்'ஆக பணிபுரிந்தார். 'யூ செட்
 இதே நாளில் அன்று

அக்., 24, 1921

கர்நாடக மாநிலம், மைசூரில், 1921 அக்., 24ம் தேதி பிறந்தவர், ராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் என்ற ஆர்.கே.லட்சுமண். இவரின் சகோதரர், பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன்.ஆர்.கே.லட்சுமண் முதலில், கன்னட நகைச்சுவை இதழான, 'கோரவஞ்சி'யில், கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின், 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக 'கார்ட்டூனிஸ்ட்'ஆக பணிபுரிந்தார். 'யூ செட் இட்' என்கிற தலைப்பில், 'காமன் மேன்' என்ற கதாபாத்திரத்தின் மூலம், அன்றாட அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளை விமர்சித்து, கார்ட்டூன் வரைந்தார்.அவரின் ஆளுமைக்கு சாட்சியாக, மும்பையில், 'காமன் மேன்' சிலை கம்பீரமாக நிற்கிறது!'ஹோட்டல் ரிவேரா, தி மெசஞ்சர்' உள்ளிட்ட நாவல்களையும், அவர் எழுதியுள்ளார். 'பத்ம பூஷண், மகசேசே, பத்ம விபூஷண்' உட்பட, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2015 ஜன., 26ல், தன், 94வது வயதில் காலமானார்.
ஆர்.கே.லட்சுமண் பிறந்த தினம் இன்று!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X