மும்பையிடம் வீழ்ந்தது சென்னை

Updated : அக் 23, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சார்ஜா: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. இடது பக்க தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா இப்போட்டியில் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக போலார்டு

சார்ஜா: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.



latest tamil news



எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. இடது பக்க தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா இப்போட்டியில் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக போலார்டு கேப்டனாக களமிறங்கினார். மாற்று வீரராக சவுரப் திவாரி தேர்வானார். சென்னை அணியில் வாட்சன், பியுஸ் சாவ்லா, கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு இம்ரான் தாகிர், ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் சேர்க்கப்பட்டனர்.

'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு 'பீல்டிங்' தேர்வு செய்தார்.சென்னை அணிக்கு கெய்க்வாட் (0), டுபிளசி (1), அம்பதி ராயுடு (2), ஜெகதீசன் (0) ஏமாற்றினர். கேப்டன் தோனி (16), ரவிந்திர ஜடேஜா (7) நிலைக்கவில்லை. சாம் கர்ரான் (52) அரைசதம் கடந்து ஆறுதல் தர, சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்க 114 ரன்கள் எடுத்தது.


latest tamil news



எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (46*), இஷான் கிஷான் (68*) கைகொடுக்க, 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணி 8வது தோல்வியை பெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-அக்-202014:25:41 IST Report Abuse
Ramesh Sargam வாழ்க்கை என்பதற்கு புது விளக்கம். "ஒரு சிஷ்யன், தன் குருவிடம். குருவே, வாழ்க்கை என்றால் என்ன? சிறிது விளக்கவும் என்று கேட்கிறான். குரு சிரித்துக்கொண்டே, "வாழ்க்கை என்பது நமது சென்னை சூப்பர் கிங்ஸ் போல கிரிக்கெட் அணி போல.. ஒரு நாள் உச்சத்தில் இருக்கும். சில நாள் நடுநிலையில் இருக்கும். ஒரு நாள் இப்பொழுது உள்ளது போல், அதலபாதாளத்தில் இருக்கும், நாளை இல்லாமல் போகும்" என்று தன் சிஷ்யனுக்கு மிகவும் சுலபமாக விளக்கமளிக்கிறார். உண்மைதானே
Rate this:
Cancel
MURUGU - SATHYAMANGALAM,இந்தியா
24-அக்-202010:32:57 IST Report Abuse
MURUGU எனக்கென்னவோ திடீரென அன்றைய சூதாட்டம் , தடை எல்லாம் ஞாபகம் வருகிறது.
Rate this:
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
24-அக்-202011:38:44 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைஎனக்கென்னவோ திடீரென அன்றைய சூதாட்டம் , தடை எல்லாம் ஞாபகம் வருகிறது. (சரியாக சொன்னீர்கள்) மீண்டும் அதே தவறு நடக்கிறதோ. மறுபடி கோர்ட் தண்டனை அளிக்குமோ?...
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
24-அக்-202009:59:40 IST Report Abuse
Viswam இன்னும் விழறதுக்கு என்ன மிச்சம் இருக்கு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X