சார்ஜா: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. இடது பக்க தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா இப்போட்டியில் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக போலார்டு கேப்டனாக களமிறங்கினார். மாற்று வீரராக சவுரப் திவாரி தேர்வானார். சென்னை அணியில் வாட்சன், பியுஸ் சாவ்லா, கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு இம்ரான் தாகிர், ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் சேர்க்கப்பட்டனர்.
'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு 'பீல்டிங்' தேர்வு செய்தார்.சென்னை அணிக்கு கெய்க்வாட் (0), டுபிளசி (1), அம்பதி ராயுடு (2), ஜெகதீசன் (0) ஏமாற்றினர். கேப்டன் தோனி (16), ரவிந்திர ஜடேஜா (7) நிலைக்கவில்லை. சாம் கர்ரான் (52) அரைசதம் கடந்து ஆறுதல் தர, சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்க 114 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (46*), இஷான் கிஷான் (68*) கைகொடுக்க, 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணி 8வது தோல்வியை பெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE