சென்னை : ''சென்னையில், தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்ட, ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரித்த, கோவிஷீல்டு தடுப்பூசியால், பக்கவிளைவுகள் ஏற்படவில்லை,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.
பரிசோதனை
பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலையின் ஆராய்ச்சி மையம் தயாரித்த, 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்தின் முதற்கட்ட ஆராய்ச்சி நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்டமாக, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது.தமிழகத்தில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி, இதுவரை, 65 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரித்த, தடுப்பூசியை போட்டுக் கொண்ட, பிரேசிலை சேர்ந்த தன்னார்வலர் உயிரிழந்தார். இதனால், தடுப்பூசியின் நம்பக தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
கண்காணிப்பு
இது குறித்து, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர், செல்வவிநாயகம் கூறியதாவது:சென்னையில் இதுவரை, 65 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை யாருக்கும், எவ்வித பாதிப்பும், பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.இந்த சோதனையில் பங்கேற்க, 78068 45198 மற்றும் covidvaccinetrial dph@gmail.com என்ற, மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE