அரசியல் செய்தி

தமிழ்நாடு

புறநகர் ரயில் சேவையை துவக்கும்படி ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Added : அக் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:சென்னையில், புறநகர் ரயில் சேவையை துவக்கும்படி, தெற்கு ரயில்வேக்கு அறிவுறுத்தக்கோரி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாடு முழுதும் மார்ச்சில், பொது ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அப்போது,தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.அதன்பின், அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. ஆனால், சென்னையில்

சென்னை:சென்னையில், புறநகர் ரயில் சேவையை துவக்கும்படி, தெற்கு ரயில்வேக்கு அறிவுறுத்தக்கோரி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாடு முழுதும் மார்ச்சில், பொது ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அப்போது,தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.அதன்பின், அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. ஆனால், சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள், இயக்கப் படாமல் உள்ளன.

இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சருக்கு, முதல்வர் எழுதியுள்ள கடிதம்:தெற்கு ரயில்வே சார்பில், மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையிலும், சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, கடந்த மாதம் துவக்கப்பட்டது. அதேபோல, பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்க, மின்சார ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவையை துவக்கும்படி, செப்டம்பர், 2ல் மாநில அரசு சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது.

புறநகர் ரயில் சேவையை துவக்குவது, பொதுமக்களுக்கு பேருதவியாக இருப்பதுடன், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும். எனவே, புறநகர் ரயில் சேவையை துவக்கும்படி, தெற்கு ரயில்வேக்கு அறிவுறுத்தவும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
24-அக்-202006:04:49 IST Report Abuse
Loganathan Kuttuva ரயில் பயண கட்டணம் மிக குறைவு பயண நேரமும் குறைவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X