பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காயம் வாங்க அதிகாரிகள் மஹாராஷ்டிராவுக்கு பயணம்

Added : அக் 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:பண்ணை பசுமைக் கடைகளில், குறைந்த விலையில் விற்பதற்காக வெங்காயம் வாங்க, கூட்டுறவு துறை அதிகாரிகள், மஹாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு சென்றுள்ளனர். தமிழகத்தில், பெரிய வெங்காயம் பயன்பாடு அதிகம் உள்ளது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழக காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, தினமும் லாரிகளில் வெங்காயம் வருகிறது. அம்மாநிலங்களில் பெய்த கன
 வெங்காயம் வாங்க அதிகாரிகள் மஹாராஷ்டிராவுக்கு பயணம்

சென்னை:பண்ணை பசுமைக் கடைகளில், குறைந்த விலையில் விற்பதற்காக வெங்காயம் வாங்க, கூட்டுறவு துறை அதிகாரிகள், மஹாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு சென்றுள்ளனர்.

தமிழகத்தில், பெரிய வெங்காயம் பயன்பாடு அதிகம் உள்ளது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழக காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, தினமும் லாரிகளில் வெங்காயம் வருகிறது. அம்மாநிலங்களில் பெய்த கன மழையால், வெங்காயம் வரத்து பாதித்துள்ளதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், வெங்காயம் கிலோ, 130 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

இதையடுத்து, கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும், 79 பண்ணை பசுமைக் கடைகளில், வெங்காயம், கிலோ, 45 ரூபாய் என்ற, குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. அந்தக் கடைகளில், குறைந்தளவில் விற்கப்படுவதால், பலருக்கு வெங்காயம் கிடைப்பதில்லை. எனவே, மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் உள்ள, ரேஷன் கடைகளிலும், வெங்காயம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, 'நாபெட்' எனப்படும், தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் வாயிலாக, மஹாராஷ்டிர மாநிலம், நாசிக், லாசல்கான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வெங்காயம் வாங்கப்பட உள்ளது.இதனால், கூட்டுறவு துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு, புனே நகருக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து, மொத்த விலை சந்தைகளுக்கு சென்று, வெங்காயம் வாங்கி, லாரிகளில் தமிழகத்திற்கு அனுப்ப உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K GANESAN - CHENNAI,இந்தியா
24-அக்-202013:23:53 IST Report Abuse
K GANESAN இந்த வெங்காயம் அரசியல் அடிக்கடி தொந்தரவு செய்கிறது. மக்கள் காய்கறிகள் வரத்து பருவத்துக்கு ஏற்றார் போல் மாறும் என்று உணர்ந்து உணவு முறைகளை மாற்றிக்கொள்ளவேண்டும். நம் முன்னோர்கள் அதை தான் செய்தார்கள். அரசு இறக்குமதி செய்து தருவது முறை ஆனால் சுபிசிடிஸ் பண்ணுவது முறையற்ற செயல்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-அக்-202009:19:19 IST Report Abuse
Bhaskaran முதலில் சாய்பாபா அப்புறம் நாசிக் பண்டரிபுரம் கோவில்களுக்குப் போய்விட்டு கடைசியில் போனில் பேசியபடி வெங்காயம் விலை நிர்ணயத்துக்காக எழுத்துப்போட்டு ஆர்டர் பண்ணநீட்ட போச்சு எல்லாம் அரசு செலவில்
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
24-அக்-202005:57:37 IST Report Abuse
Loganathan Kuttuva மொழி பிரச்சனை இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X