பொது செய்தி

தமிழ்நாடு

நம்பிக்கை இருந்தால் நீட் தேர்வில் வெற்றி எளிது

Updated : அக் 24, 2020 | Added : அக் 23, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
மதுரை : “நம்பிக்கை, பயிற்சி இருந்தால் கோச்சிங் சென்டர் போகாமல் கூட நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்” என அத்தேர்வில் 666 மதிப்பெண் பெற்ற மதுரை மாணவி உய்யஸ்ரீநிலா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:மதுரை நரிமேடு கே.வி., பள்ளியில் படித்தேன். நீட்தேர்வில் ஆல் இந்தியாஅளவில் 1612வது இடம் பெற்றுள்ளேன். தெளிவான எண்ணம், பயிற்சி, மாதிரி தேர்வு எழுதுவது, நம்பிக்கை இருந்தால் நீட் தேர்வு
நம்பிக்கை,  நீட் தேர்வு, வெற்றி எளிது

மதுரை : “நம்பிக்கை, பயிற்சி இருந்தால் கோச்சிங் சென்டர் போகாமல் கூட நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்” என அத்தேர்வில் 666 மதிப்பெண் பெற்ற மதுரை மாணவி உய்யஸ்ரீநிலா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:மதுரை நரிமேடு கே.வி., பள்ளியில் படித்தேன். நீட்தேர்வில் ஆல் இந்தியாஅளவில் 1612வது இடம் பெற்றுள்ளேன். தெளிவான எண்ணம், பயிற்சி, மாதிரி தேர்வு எழுதுவது, நம்பிக்கை இருந்தால் நீட் தேர்வு என்பது பெரிய விஷயம் இல்லை.என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டம் முழுவதும் படித்தேன். மாலை 4:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை படிப்பேன். தேர்வு என்ற பதட்டமின்றி மனதை பிரீயாக வைத்துகொண்டு படித்தேன்.படிப்புக்கு இடையே இசை, பாடல்கள் கேட்பேன்.

என்னை டாக்டர் ஆக வேண்டும் என என் பெற்றோர் எப்போதும் வற்புறுத்தியது இல்லை. என் இஷ்டப்படி தான் பாடங்களை தேர்வு செய்து படித்தேன். பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களுடன் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பின் அடிப்படை பாடங்களை நன்கு படித்திருப்பது அவசியம். நம்பிக்கை, உரிய பயிற்சியுடன் படித்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.B.RAM - bangalore,இந்தியா
25-அக்-202006:59:40 IST Report Abuse
V.B.RAM நம்பிக்கை, பயிற்சி இருந்தால் கோச்சிங் சென்டர் போகாமல் கூட??? தமிழின துரோகி, நாங்கள் எல்லாம் மீடியாவின் துணையுடன், மற்றும் திமுகாவின் துணையுடன் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பொது நீ எப்படி, நம்பிக்கை , தும்பிக்கை என்று கூறலாம், எங்களுக்கு, நம்பிக்கை தேவையில்லை. ஒதுக்கீடு, மற்றும் இலவசம்தான் தேவை.
Rate this:
Cancel
25-அக்-202005:59:30 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா நீட் தேர்வு எழுதாமலேயே குடும்பத்தில் உள்ளவருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுக்கும் திமுகவினர் ...
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
25-அக்-202005:58:47 IST Report Abuse
Elango நம்பிக்கை மட்டும் அல்ல விடாமுயற்சி தேவை. கோச்சிங் வகுப்பு செல்ல பணவசதியும் தேவை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X