பதிவுத் துறையில் நிதி நிர்வாகம் தொடர்பான கோப்புகளை, கணக்கு தணிக்கை பணிக்கு, டிஜிட்டல் முறையில் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும், வரவு - செலவு விபர கணக்கானது, தணிக்கைக்கு உட்படுத்தப்படும். இதற்காக, சம்பந்தப்பட்ட நிதியாண்டின் கோப்புகள், அந்தந்த துறைகள் வாயிலாக தொகுக்கப்பட்டு, கணக்கு தணிக்கை துறைக்கு அனுப்பப்படும். சில சமயங்களில், கணக்கு தணிக்கை பிரிவு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் தணிக்கை செய்வர்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்வதிலும், கோப்புகளை எடுத்து வருவதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை கருத்தில் வைத்து, மத்திய அரசின் கணக்கு தணிக்கை துறை, கோப்புகளை டிஜிட்டல் முறையில் அனுப்பஉத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான நிதித் துறையின் அறிவுறுத்தல்கள், பதிவுத் துறைக்கு வந்துள்ளன. இதையடுத்து, கணக்கு தணிக்கைக்கு செல்ல வேண்டிய கோப்புகளை, டிஜிட்டல் முறையில் மாற்றி அனுப்ப, டி.ஐ.ஜி.,க்களுக்கு பதிவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளிலும், இதே நடைமுறை பின்பற்றப்படும் என, தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE