'இலவச தடுப்பூசி வாக்குறுதி சட்டத்துக்கு புறம்பானது அல்ல': முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: 'பீஹார் மக்களுக்கு, இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்ற, பா.ஜ.,வின் தேர்தல்அறிக்கையில், சட்டப்படி தவறு இல்லை' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல், வரும், 28ல் துவங்கி, மூன்று கட்டங்களாக நடக்கிறது.

புதுடில்லி: 'பீஹார் மக்களுக்கு, இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்ற, பா.ஜ.,வின் தேர்தல்அறிக்கையில், சட்டப்படி தவறு இல்லை' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



latest tamil news


பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல், வரும், 28ல் துவங்கி, மூன்று கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி, தே.ஜ., கூட்டணியின் தேர்தல் அறிக்கையை, பா.ஜ., நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், 'தேர்தலில் வெற்றி பெற்றால், பீஹார் மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.கண்டனம்இதற்கு, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட, பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். 'நோய் தொற்றின் மீதான மக்களின் அச்சத்தை, பா.ஜ., அரசியல் ஆக்குகிறது' என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் ஓ.பி.ராவத், குரேஷி உள்ளிட்ட மூவர், இது குறித்து கருத்து தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: தேர்தல் அறிக்கை வெளியிடும் ஒரு கட்சி, எந்த மாதிரியான வாக்குறுதியையும் அளிக்கலாம், ஆனால், அதை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரம் குறித்தும், அது எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்தும், அக்கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற உத்தரவு தெரிவிக்கிறது.


latest tamil news


தேர்தல் அறிக்கையில், சட்டப்படி எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கலாம். ஆனால், அவை நியாயமற்றதாக இருக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நெறிமுறைகள்தேர்தல் நடத்தை விதிமுறை என்பது, வெறும் சட்டம் மட்டும் அல்ல; அது, நெறிமுறைகள் சம்பந்தப்பட்டது. எனவே, நெறிமுறைகள் தொடர்பான கேள்விகள் எழுவது இயல்பு. பீஹார் சட்டசபை தேர்தல் அறிக்கையில், பா.ஜ., அளித்து உள்ள வாக்குறுதி, சட்டத்துக்கு புறப்பானது அல்ல.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-அக்-202014:30:51 IST Report Abuse
Ramesh Sargam "தடுப்பூசி இன்று வரும், நாளை வரும் என்று இதுவரை ஜோசியம் தான் கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த தடுப்பூசி என்று இந்தியாவுக்கு வரும். என்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்கிற தகவல் இல்லை. ஆகையால், இதுபோன்ற இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வீசாமல் இருந்தால் நல்லது."
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
24-அக்-202009:28:06 IST Report Abuse
 Muruga Vel தேஜஸ்வி பத்துலட்சம் அரசாங்க வேலை தருவதாக வாக்குறுதி ..இந்தியன் ரெயில்வே மொத்த ஊழியர்களே பனிரெண்டு லட்சம் தான் ..மாதம் இருபத்தைந்தாயிரம் சம்பளம் என்றாலும் இரண்டாயிரத்து ஐநூறு கோடி சம்பளம் ..ஏற்கனவே ஆண்டுக்கு இருபதாயிரம் கோடி பற்றாக்குறை பட்ஜெட் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X