பொது செய்தி

இந்தியா

பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளக்காடான சாலைகள்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.(அக்.,23 )வெள்ளி மாலையில் 3 மணி நேரமாக விடாது பெய்த கனமழையின் காரணமாக கார்கள் பைக்குகள் மூழ்கின. வெள்ளம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். நகரின் முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து

பெங்களூரு: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.



latest tamil news


(அக்.,23 )வெள்ளி மாலையில் 3 மணி நேரமாக விடாது பெய்த கனமழையின் காரணமாக கார்கள் பைக்குகள் மூழ்கின. வெள்ளம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். நகரின் முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மைசூரு ரோடு, சில்க் போர்டு ஜங்சன், ஓசுர் ரோடு, பேனர்கட்டா ரோடு, பசவனகுடி, ஆர்.ஆர்.நகர், நயண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் காரணமா வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்தன. நகரின் பிடிஎம் லேஅவுட், பசவனகுடி, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டன. நிலைமையை சரி செய்ய ஆங்காங்கே மோட்டார் பம்ப் உதவியுடன் வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.


latest tamil news


இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-அக்-202013:00:41 IST Report Abuse
Ramesh Sargam ஆனால் இந்த கனமழையினால் ஒரு நல்லதும் நடந்துச்சு. ஆயுத பூஜைக்கு மக்கள் தங்கள் வாகனங்களை சுத்தம் செய்ய யோசித்துக் கொண்டிருந்தார்கள். இந்த கனமழையினால், வாகனங்களும் சுத்தம் ஆச்சு. தண்ணீரும் மிச்சமாச்சு.
Rate this:
Cancel
24-அக்-202010:13:16 IST Report Abuse
chandran, pudhucherry காம கண்களுக்கு இது தெரியாது. மழை பெய்தா தண்ணி சாலைகளில் ஓடாம வீட்டு மேலயா ஓடும்
Rate this:
Cancel
shanan -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-202009:09:32 IST Report Abuse
shanan இங்கே பார் அந்த உலகத்திற்கு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X