பெங்களூரு: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

(அக்.,23 )வெள்ளி மாலையில் 3 மணி நேரமாக விடாது பெய்த கனமழையின் காரணமாக கார்கள் பைக்குகள் மூழ்கின. வெள்ளம் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். நகரின் முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மைசூரு ரோடு, சில்க் போர்டு ஜங்சன், ஓசுர் ரோடு, பேனர்கட்டா ரோடு, பசவனகுடி, ஆர்.ஆர்.நகர், நயண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் காரணமா வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்தன. நகரின் பிடிஎம் லேஅவுட், பசவனகுடி, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டன. நிலைமையை சரி செய்ய ஆங்காங்கே மோட்டார் பம்ப் உதவியுடன் வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE