'ஜாமின்' நீட்டிப்பு பெற்றவர்கள் சரண் அடைய கோர்ட் உத்தரவு

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : டில்லியில், விசாரணை கைதிகளின், 'ஜாமின்' காலம், கொரோனாவால் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 'அவர்கள் அனைவரும் நீதிமன்றங்களில் சரண் அடைய வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் சார்பில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு, மார்ச், 25க்கு முன் வழங்கப்பட்ட

புதுடில்லி : டில்லியில், விசாரணை கைதிகளின், 'ஜாமின்' காலம், கொரோனாவால் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 'அவர்கள் அனைவரும் நீதிமன்றங்களில் சரண் அடைய வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.



latest tamil news



டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் சார்பில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு, மார்ச், 25க்கு முன் வழங்கப்பட்ட ஜாமின், கொரோனா பரவல் காரண மாக காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.இடைக்கால தடை உத்தரவுகளுக்கான கால வரம்பும், விசாரணையின்றி தொடர்ந்தது.

'வீடியோ கான்பரன்ஸ்'
இதுதொடர்பாக, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, டி.என்.படேல், நீதிபதிகள், சித்தார்த் மிருதுள் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:கொரோனா ஊரடங்கால் நீதிமன்ற செயல்பாடுகள் முடங்கின. அத்துடன், சிறை கைதிகளுக்கு கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டது.இதனால், 356 பேருக்கு உயர் நீதிமன்றம் தரப்பிலும், 2,318 பேருக்கு, மாவட்ட நீதிமன்றங்கள் தரப்பிலும், மார்ச், 25க்கு முன் வழங்கிய ஜாமின், காலவரையின்றி நீட்டிக்கப் பட்டது. தற்போது, நீதிமன்றங்கள் வழக்கமாக மற்றும் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக செயல்படு கின்றன.மனு தாக்கல்சிறையில் உள்ள, 16 ஆயிரத்திற்கும் மேலான கைதிகளில், கொரோனா தொற்றுள்ள மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே, உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில், வரும், 31 வரை ஜாமின் நீட்டிக்கப்பட்ட அனைவரும், அடுத்த மாதம், 2 - 13ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் முன், சரண் அடைய வேண்டும்.


latest tamil news



அவர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை, சிறைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை உள்ளிட்டவற்றை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். 'சிவில்' வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் தொடர்பாக, அடுத்து வரும் தேதியில் நீதிமன்றங்கள் விசாரணை நடத்தலாம். ஜாமின் நீட்டிப்பு பெறுதல் மற்றும் சிவில் வழக்குகளின் இடைகால உத்தரவுகளில் கால நீட்டிப்பு பெற விரும்புவோர், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து தீர்வு காணலாம். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-அக்-202018:40:21 IST Report Abuse
Endrum Indian பசி, பப்பு, சோனியாவின் நிலைமை, அவர்கள் ஜாமீனில் உள்ளவர்களாச்சே
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
24-அக்-202017:25:18 IST Report Abuse
Swaminathan Chandramouli ப சி , ஆண்டி ராசா , கனி தங்கச்சி முதலிய அப்பழுக்கு இல்லாத . குற்றமே செய்யாத குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு சிலகாலம் கழித்து ஜாமீன் அளிக்க பட்டவர்கள் இப்போது திரும்பவும் திஹார் சிறைக்கு திரும்ப வேண்டிய சூழ் நிலை வந்து விட்டது பாவம் அந்த நிரபராதிகள்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
24-அக்-202012:38:48 IST Report Abuse
Sridhar அப்போ சோனியா ராகுலுக்கு கொடுத்த ஜாமீனும் ரத்தாகுமா? இல்ல வாழ்க்கைக்கும் ஜாமீனா? என்னய்யா நீதிமன்றம்? குற்றவாளிகளுக்கே சுதந்திரம் கொடுக்குதே? பாவம் தப்பே செய்யாத எவ்வளவு நிரபராதிகள் வசதி இல்லாத காரணத்தால் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்களோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X