பொது செய்தி

இந்தியா

போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவி கடற்படை பயிற்சி

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க கூடிய தயார் நிலையில், நம் வீரர்கள் இருப்பதை உணர்த்துவதற்காக, அரபிக் கடல் பகுதியில், போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வீசி, நம் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது.இந்தியா, சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், பல மாதங்களாக பதற்றம் நிலவி வருவதை அடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், நம் கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை


புதுடில்லி: எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க கூடிய தயார் நிலையில், நம் வீரர்கள் இருப்பதை உணர்த்துவதற்காக, அரபிக் கடல் பகுதியில், போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வீசி, நம் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது.



latest tamil news


இந்தியா, சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், பல மாதங்களாக பதற்றம் நிலவி வருவதை அடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், நம் கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.அவசர காலத்தில், நம் படையினரின் தயார் நிலை குறித்து அறிய, அவ்வப்போது பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.எதிரி கப்பல்களை ஏவுகணை வாயிலாக துல்லியமாக தாக்கும் பயிற்சி, அரபிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது.


latest tamil news


அப்போது, 'ஐ.என்.எஸ்., பிரபால்' போர் கப்பலில் இருந்து, போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வீசப்பட்டது; இது, நம் படைக்கு சொந்தமான பழைய மூழ்கும் கப்பலை, மிக துல்லியமாக சென்று தாக்கி அழித்தது.விமான தாங்கி போர் கப்பலான, 'ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா' உட்பட, பல்வேறு போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உள்ளிட்டவை, இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், பயிற்சியை பார்வையிட்டு, வீரர்களை பாராட்டினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
24-அக்-202015:00:50 IST Report Abuse
M.COM.N.K.K. எதிரிகளை பயமுறுத்த பயிற்சியை அதிகப்படுத்தலாம் மேலும் தேவைப்பட்டால் சக்தி குறைந்த அணுஆயுதங்கள் இருக்குமானால் அதையும் பயிற்சியில் சோதித்து பார்க்கலாம் அப்போதாவது அந்த இரண்டு போக்கிரிகளும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். அணுஆயுதங்களையும் அடிக்கடி சோதித்து பார்ப்பது நல்லது பிற்காலத்தில் நமது இந்தியாவிற்கு கண்டிப்பாக பயன்படும்.நாம் யாரையும் அழிக்க விரும்புவதில்லை ஆனால் நம்மை அழிக்க அவர்கள் தயாராகும்போது நாம் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாதல்லவா ஆகவேதான் நமக்கு அணுஆயுதம் முக்கியம்
Rate this:
Cancel
SIVANATHAN - மதுரை,இந்தியா
24-அக்-202008:24:02 IST Report Abuse
SIVANATHAN ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X