போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவி கடற்படை பயிற்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவி கடற்படை பயிற்சி

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க கூடிய தயார் நிலையில், நம் வீரர்கள் இருப்பதை உணர்த்துவதற்காக, அரபிக் கடல் பகுதியில், போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வீசி, நம் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது.இந்தியா, சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், பல மாதங்களாக பதற்றம் நிலவி வருவதை அடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், நம் கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை


புதுடில்லி: எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க கூடிய தயார் நிலையில், நம் வீரர்கள் இருப்பதை உணர்த்துவதற்காக, அரபிக் கடல் பகுதியில், போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வீசி, நம் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது.



latest tamil news


இந்தியா, சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், பல மாதங்களாக பதற்றம் நிலவி வருவதை அடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், நம் கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.அவசர காலத்தில், நம் படையினரின் தயார் நிலை குறித்து அறிய, அவ்வப்போது பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.எதிரி கப்பல்களை ஏவுகணை வாயிலாக துல்லியமாக தாக்கும் பயிற்சி, அரபிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது.


latest tamil news


அப்போது, 'ஐ.என்.எஸ்., பிரபால்' போர் கப்பலில் இருந்து, போர் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வீசப்பட்டது; இது, நம் படைக்கு சொந்தமான பழைய மூழ்கும் கப்பலை, மிக துல்லியமாக சென்று தாக்கி அழித்தது.விமான தாங்கி போர் கப்பலான, 'ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா' உட்பட, பல்வேறு போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உள்ளிட்டவை, இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், பயிற்சியை பார்வையிட்டு, வீரர்களை பாராட்டினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X