போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே இந்திய உறவு - டிரம்பை விளாசும் பிடன்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க - இந்திய உறவை போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே டிரம்ப் பயன்படுத்தினார். நான் காரியங்களை செய்து முடிப்பேன் என பிடன் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் 20 லட்சம் இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்தஎண்ணிக்கை குறிப்பிட்ட சில மாநிலங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடும் என இரு கட்சியின் அதிபர் வேட்பாளர்களும்

வாஷிங்டன்: அமெரிக்க - இந்திய உறவை போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே டிரம்ப் பயன்படுத்தினார். நான் காரியங்களை செய்து முடிப்பேன் என பிடன் கூறியுள்ளார்.latest tamil news


அமெரிக்க அதிபர் தேர்தலில் 20 லட்சம் இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்தஎண்ணிக்கை குறிப்பிட்ட சில மாநிலங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடும் என இரு கட்சியின் அதிபர் வேட்பாளர்களும் கணித்துள்ளனர். இதனால் இந்திய - அமெரிக்க உறவு பற்றி தொடர்ந்து பேசி வருகின்றனர். கருத்துக்கணிப்பிலோ இந்திய அமெரிக்க உறவுக்கு அமெரிக்க இந்தியர்கள் கடைசி இடமே தந்துள்ளனர். அவர்களுடைய கவலை நல்ல சுகாதார வசதியாக உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இந்தியர்களுக்காக வெளியாகும் 'வெஸ்ட் இந்தியா' பத்திரிகையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 2008-ம் ஆண்டில் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராக, வரலாற்று சிறப்பு மிக்க இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பங்கு வகித்தேன். அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டால், உலகம் பாதுகாப்பான இடமாக இருக்கும் என அப்போது கூறினேன். ஒபாமாவின் 2009-2016 பதவிக்காலம் இரு நாடுகளுக்கிடையில் சிறந்த ஆண்டுகளாகும். நானும் இந்திய வம்சாவளி துணை அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரீஸ் அதனை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம். நாம் இயற்கையான கூட்டாளிகள்.


latest tamil news


நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோம். சீனா அதன் அண்டை நாடுகளை அச்சுறுத்தாத வகையில், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம். நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள், சமத்துவம், கருத்து மற்றும் மத சுதந்திரம் இது போன்று எண்ணற்ற வலிமையை இரு நாடுகளும் நமது பன்முகத்தன்மையிலிருந்து பெறுகின்றன. இந்த அடிப்படை கொள்கைகள் ஒவ்வொரு நாடுகளின் வரலாறுகளிலும் நீடித்திருக்கின்றன. எதிர்காலத்திலும் இது தொடரும். இவ்வாறு எழுதியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
24-அக்-202018:17:34 IST Report Abuse
Murthy அமெரிக்காவில் யார் வந்தாலும் இந்தியாவின் நலனைவிட அமெரிக்க நலனையே பார்ப்பார்கள். அமெரிக்க இந்தியர்களும் இந்தியாவின் நலனைவிட அவர்கள் நலனைத்தான் பார்ப்பார்கள்.
Rate this:
Raja - chennai,இந்தியா
25-அக்-202017:40:15 IST Report Abuse
Rajaஇது அமெரிக்காவிற்கான தேர்தல். அவர்கள் ஏன் இந்தியாவின் நலனை பார்க்கவேண்டும். இங்குள்ள சில பேர் இது புரியாமல் டிரம்ப் வந்தால் இந்தியாவிற்கு நல்லது என்று சொல்கின்றனர். டிரம்ப் அதிபராக வந்த உடன் எத்தனை இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பறிக்க பட்டது என்று யோசித்தால் இதில் உள்ள உண்மை புரிய வேண்டும்....
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
24-அக்-202016:03:54 IST Report Abuse
Raj மோடி நல்ல ஏமாற்றப்பட்டார் டிரம்ப்பிடம்
Rate this:
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
25-அக்-202008:24:21 IST Report Abuse
Maheshஎந்த விதத்தில்?...
Rate this:
Cancel
24-அக்-202014:22:52 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ சைனாவுடன் ட்ரம்ப்புக்கு ரகசிய உறவு, ஜோபிடனுக்கு நேரடி உறவு, அம்புட்டுதான் வித்தியாசம், உலகில் வல்லரசு நாடு எல்லாத்துக்கும் ரகசிய உறவு உண்டு, எந்தெந்த நாடுகள் சண்டை போட வேண்டும், எந்தெந்த நாடுகளுக்கு யார்யார் ஆயுதம் சப்ளை செய்யவேண்டும், எப்போது, எங்கே, என்றைக்கு என்று எல்லாவற்றையும் முடிவு செய்வது வல்லரசுகள்தான், மேலும் அவர்களது பழைய ஆயுதங்கள், மற்றும் சோதனை செய்து பார்க்கவேண்டிய தருணங்கள் வரும்போது கொம்பு சீவி விடுவார்கள், அவர்கள் பொருளாதாரத்தில் செழித்துக் கொண்டு சண்டையிடும் நாடுகளை பிச்சைக்கார அடிமை நாடுகளாக பேணி வருவார்கள்.
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
24-அக்-202019:48:39 IST Report Abuse
Naresh Giridharதெரியாமல் வாய்வுக்கு வந்ததை உளறவேண்டாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X