குறிப்பிட்ட சொற்களை பயன்படுத்த அர்னாப்புக்கு நீதிமன்றம் அனுமதி

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: 'ரிபப்ளிக் டிவி'யின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பங்குபெறும் நிகழ்ச்சிகளில், 'தேசம் அறிய விரும்புகிறது' என்று பொருள்படும், 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' என்ற சொற்றொடரை பயன்படுத்தலாம் என டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, 'பென்னட் அண்ட் கோல்மென்' நிறுவனத்துக்கு சொந்தமான, 'டைம்ஸ் நவ் டிவி'யில், பல
Arnab, NationWantsToKnow, DelhiCourt, அர்னாப், டில்லி நீதிமன்றம்

புதுடில்லி: 'ரிபப்ளிக் டிவி'யின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி பங்குபெறும் நிகழ்ச்சிகளில், 'தேசம் அறிய விரும்புகிறது' என்று பொருள்படும், 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' என்ற சொற்றொடரை பயன்படுத்தலாம் என டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, 'பென்னட் அண்ட் கோல்மென்' நிறுவனத்துக்கு சொந்தமான, 'டைம்ஸ் நவ் டிவி'யில், பல ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது, 'நியூஸ் ஹவர்' என்ற, செய்தி விவாத நிகழ்ச்சியின் நெறியாளராக இருந்து, தினம்தோறும் நடத்தி வந்தார். அந்த விவாதத்தின் போது, அரசியல் பிரமுகர்களை மடக்க, 'தேசம் அறிய விரும்புகிறது' என்று பொருள்படும், 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' என்ற சொற்றொடரை, அடிக்கடி பயன்படுத்தி வந்தார். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, அர்னாப் பிரபலமடைந்தார். பின், 'டைம்ஸ் நவ்'ல் இருந்து விலகி, 2016ல், 'ரிபப்ளிக் டிவி' என்ற செய்தி தொலைக்காட்சியை, சொந்தமாக துவங்கினார்.


latest tamil news


அதில் அவர் நடத்திய விவாத நிகழ்ச்சியில், 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தினார். இந்நிலையில், 'நியூஸ் ஹவர், நேஷன் வான்ட்ஸ் டு நோ' போன்ற தலைப்புகளுக்கு, தங்களிடம் காப்புரிமை இருப்பதாகவும், அதை அர்னாப் பயன்படுத்த தடை விதிக்க கோரியும், 'பென்னட் அண்ட் கோல்மென்' நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'அர்னாப் பங்குபெறும் நிகழ்ச்சிகளில், 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' என்ற சொற்றொடரை பயன்படுத்தலாம்' என உத்தரவிட்டது. அதே நேரம், 'நியூஸ் ஹவர்' போன்ற வார்த்தைகளின் பொருள்படும் தலைப்புகளை நிகழ்ச்சிகளில் பயன்படுத்த, அர்னாப்புக்கு இடைக்கால தடை விதித்தது,

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
24-அக்-202015:02:09 IST Report Abuse
Anand ஒரு உண்மையான தேசபக்தரை ரவுடி ஆட்சி நடத்தும் மஹாராஷ்டிரா துக்கடா அரசு பழிவாங்கும் நோக்கில் பலவிதமான தொல்லைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
24-அக்-202010:42:15 IST Report Abuse
Nagarajan D தேசத்தை நேசிப்பவன் தேச நலனில் அக்கறை கொண்டவன் அர்னாப்....
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
24-அக்-202009:26:53 IST Report Abuse
மூல பத்திரம் போகிற போக்கை பார்த்தால் அம்மா என்பதற்கு கூட காபி ரைட் எடுப்பார்கள் போகிறது
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-அக்-202013:43:18 IST Report Abuse
Dr. Suriyaஆமால.....இத கேள்விப்பட்ட சிலபேரு கலைங்கர், தளபதி என்கிற பெயரை எல்லாம் எவரும் பயன்படுத்த கூடாது எங்களுக்கு மட்டுமே உரியதுன்னு சொன்னா. நம்ப புரட்சி கலைங்கர், இளைய தளபதி எல்லாம் என்ன பண்ணுவாங்கலோ ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X