பொது செய்தி

இந்தியா

"நம்பிக்கைதான் வெற்றி தரும் என நம்பி எல்லா தேர்தலிலும் இறங்கி விடுகிறீர்கள். வெற்றிதான் கிடைக்க மாட்டேன் என்கிறது..."

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நுாற்றாண்டு கால வரலாற்றில், தேச நலனை பாதுகாப்பதில், எங்கள் கட்சி மகத்தான தியாகங்களை செய்துள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி, பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் விஜயராகவன்.'நம்பிக்கை தான், வெற்றி தரும் என நம்பி, எல்லா
விஜயராகவன், லியோனி, வானதி சீனிவாசன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நுாற்றாண்டு கால வரலாற்றில், தேச நலனை பாதுகாப்பதில், எங்கள் கட்சி மகத்தான தியாகங்களை செய்துள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி, பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறும்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் விஜயராகவன்.


'நம்பிக்கை தான், வெற்றி தரும் என நம்பி, எல்லா தேர்தலிலும் இறங்கி விடுகிறீர்கள்; வெற்றி தான் கிடைக்க மாட்டேன் என்கிறது...' என, கிண்டல் செய்யத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் விஜயராகவன் பேச்சு.



சிறையிலிருக்கும் சசிகலா விடுதலை ஆனதும், அ.தி.மு.க.,வில் நிச்சயம் பாதிப்பு இருக்கும். அவர் வந்ததும், அ.தி.மு.க.,வினர் அனைவரும் அவர் காலில் விழுந்து, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுங்கள் என சொல்லப் போகின்றனர்
- தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் லியோனி.


'தி.மு.க.,வில் உங்களுக்கு பொறுப்பு கிடைத்ததும், ஞான திருஷ்டியும் சேர்ந்து வந்து விட்டது போலிருக்கிறதே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் லியோனி பேட்டி.



தமிழை, டி - ஷர்ட் அணிந்து வளர்க்க முடியாது என நான் குறிப்பிட்டது உண்மை தான். இத்தனை ஆண்டு காலம், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த, தி.மு.க., அப்போதெல்லாம், தமிழ் வளர்ச்சிக்காக எதுவுமே செய்யாமல், இப்போது, டி - ஷர்ட் போட்டு பிரசாரம் செய்கிறது
- வானதி சீனிவாசன்.


latest tamil news





'டி - ஷர்ட்டில் ஆங்கிலத்தில், 'ஹிந்தி தெரியாது போடா' என, எழுதியுள்ளனர். அதை, அரைகுறையாக பார்ப்பவர்களுக்கு, 'போண்டா, டீ கொண்டு வாடா' போல தெரிகிறது...' என, ஜோக்கடிக்கத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., துணைத் தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.



ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கை ஆகியவற்றை ரத்து செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் தமிழ்மணி.


'முதலில் போராட வேண்டும்; அதன் பிறகு, நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என கெஞ்ச வேண்டும்; போங்க சார், நீங்களும், உங்கள் போராட்டங்களும்...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் தமிழ்மணி பேட்டி.



தகுதியான அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்லுாரியில் சேர்வதற்கு எந்தவித தடையும் இருக்காது. அதற்கான முழு முயற்சியை, முதல்வர் எடுத்து வருகிறார். நல்ல முடிவு விரைவில் அறிவிக்கப்படும். இதற்காக, யாரும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை
- அமைச்சர் செங்கோட்டையன்.


'நீட் தேர்வு எழுதாமல், முதல்வர் தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, இடங்கள் வாங்கிக் கொடுக்கப் போகிறாரா; இன்னமும், தமிழக மாணவர்களை ஏமாற்றாதீர்கள்; நன்றாக படிக்கச் சொல்லுங்கள்...' என, அறிவுரை கூறத் துாண்டும் வகையில், தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
24-அக்-202018:16:16 IST Report Abuse
Madhusoodhana Ramachandran இக்கால கம்யூனிஸ்டுகள் சரியான பச்சோந்திகள். சந்தர்ப்ப வாதிகள். பெரிய தொழிற்சாலைகளில் அவசிய மில்ல போராட்டங்களை தூண்டி உற்பத்தியை தேக்கமடைய செய்பவர்கள். சிறிய தொழிற்சாலைகளை மூட செய்பவர்கள். இவர்களை நெய்வேலையில் ஓட ஓட தி ம க எம்லே எ காட்டூர் கோபால் ஓட்டினது மறந்து அவர்களுடன் சந்தர்ப்பவாத கூட்டு வைத்திருப்பவர்கள். அப்போது அப்பாவி தொழிலார்களை தீ மு க்க போலீசை வைத்து அவர்கள் நகரிய வீட்டில்நிலை வைத்து சிசுக்கள் முதல் பெரியவர்கள் வரை அடித்து துவமசம் செய்த கதை எத்தனை பேருக்கு தெரியும்.ஆனால் இப்போ உள்ள கம்யூனிஸ்டுகள் அவர்களுடனே தோல் மேலே கைய் போட்டு பேசுகிறார்கள்.
Rate this:
Cancel
24-அக்-202015:25:29 IST Report Abuse
அருணா பணம் பெற்றுக் கொண்டு என்ன சொன்னாலும் செய்தாலும் வாழ்க கோஷம் போடும் வரை தங்கள் கட்சி முதன்மை பெறுவது சாத்தியம் இல்லை.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
24-அக்-202014:49:56 IST Report Abuse
r.sundaram திமுக ஆட்சி செய்யும் போது என்ன செய்தது என்பதை சர்க்காரியா கமிசன் அறிக்கையை படித்து தெரிந்து கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X