அரசியல் செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரியில் தமிழிசை: பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., பரிந்துரை

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளராக, தெலுங்கானா கவர்னர் தமிழிசை போட்டியிட்டால், காங்கிரஸ் வேட்பாளருக்கு கடும் நெருக்கடி கொடுப்பதுடன், வெற்றியும் பெற முடியும் என, பா.ஜ., மேலிடத்திற்கு, அ.தி.மு.க., பரிந்துரை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் முடிவு
A.D.M.K, ADMK, B.J.P, BJP, Bharatiya Janata Party, Kanyakumari, Tamilisai Soundararajan, அ.தி.மு.க, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், கன்னியாகுமரி ,தமிழிசை, தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளராக, தெலுங்கானா கவர்னர் தமிழிசை போட்டியிட்டால், காங்கிரஸ் வேட்பாளருக்கு கடும் நெருக்கடி கொடுப்பதுடன், வெற்றியும் பெற முடியும் என, பா.ஜ., மேலிடத்திற்கு, அ.தி.மு.க., பரிந்துரை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த தேர்தல் முடிவு, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கான வெள்ளோட்டமாக கருதப்படுகிறது. கொரோனா தடுப்பூசி அறிவிப்புடன், கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தமிழக பா.ஜ., எதிர்பார்க்கிறது.

வேட்பாளர் தேர்வு குறித்த கள ஆய்வு பணி, பா.ஜ., தரப்பில் துவக்கப்பட்டு உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், தனக்கு கடைசி தேர்தல் என, கூறி வாய்ப்பு கேட்டுள்ளார். தனக்கு, 69 வயதாகி விட்டது. அடுத்த தேர்தலில் போட்டியிட, வயது முதிர்வு காரணமாக, வாய்ப்பு கிடைக்காது. எனவே, இந்த ஒரு முறை வாய்ப்பு தரும்படி, மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

குஜராத் மாநில முன்னாள் தலைமைச் செயலர் ஜெகதீச பாண்டியன். கத்தோலிக்க கிறிஸ்துவரான இவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரான ஜெகதீச பாண்டியனை வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில், கிறிஸ்துவ நாடார் ஓட்டுகளை, பா.ஜ., வுக்கு திரட்ட முடியும். இவர் வெற்றி பெற்றால்,2024லோக்சபா தேர்தலில், திருவனந்தபுரம், கன்னியாகுமரி ஆகிய இரண்டு தொகுதிகளையும், காங்கிரசிடமிருந்து பா.ஜ.,வால் கைப்பற்ற முடியும் என்றும் கணக்கு போடப்படுகிறது.


latest tamil news


தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் சார்பில், மறைந்த வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த் போட்டியிட்டால், அவருக்கு கடும் போட்டியாளராக தமிழிசை இருப்பார். அவர் டாக்டர் என்பதால், தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பதவி, தமிழிசைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 'தமிழிசை போட்டியிட்டால், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தக்க பதிலடி கொடுத்து, பிரசாரம் செய்வார்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், அ.தி.மு.க., மேலிடம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - chennai,இந்தியா
24-அக்-202019:14:11 IST Report Abuse
ramesh தமிழிசை அவர்கள் நன்றாக கவர்னர் ஆக இருப்பது பிடிக்கவில்லையா .அவர் மீது இன்னும் என்ன கோபம் ஆளும் கட்சியினருக்கு
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-அக்-202018:13:16 IST Report Abuse
Endrum Indian கன்னியாகுமரி கிறித்துவ மயம் ஆகவே கிருத்துவன் ஒருவன் ஜோசப் விஜய் போட்டியிட்டால் சரியாக இருக்கும் ஏன்னா விஜய் மக்கள் பேரவை தான் பி ஜெ பையுடன் சேர்ந்ததாக செய்தி வந்ததே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-அக்-202018:00:42 IST Report Abuse
J.V. Iyer வயதானவர்களுக்கும், கவர்னர் ஆனவர்களுக்கும் தேவையில்லை. இளைஞருக்கு கொடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X