அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின்

Updated : அக் 24, 2020 | Added : அக் 24, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை: 7.5 சதவீத மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு அழுத்தம் கொடுக்காமல், அதிமுக அரசு அஞ்சுவதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத கவர்னரை கண்டித்தும், மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசை கண்டித்தும் கவர்னர் மாளிகை முன்பு தி.மு.க., சார்பில்

இந்த செய்தியை கேட்க

சென்னை: 7.5 சதவீத மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு அழுத்தம் கொடுக்காமல், அதிமுக அரசு அஞ்சுவதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத கவர்னரை கண்டித்தும், மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசை கண்டித்தும் கவர்னர் மாளிகை முன்பு தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



latest tamil news




இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு 40 நாட்கள் ஆகியும் கவர்னர் அனுமதி தரவில்லை. அனுமதியை பெற்றுத்தர முடியாத அரசாக பழனிசாமி ஆட்சி உள்ளது. இதனை கண்டித்து இந்த ஆர்ப்பட்டம் நடக்கிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் குளறுபடிகள் உள்ளன. நீட் தேர்வை பொறுத்தவரையில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. நீட் தேர்வு கூடாது என்பது தான் நமது கொள்கை. கருணாநிதி ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை. . ஆனால், பழனிசாமி ஆட்சியில், நீட் நுழைந்துள்ளது. பதவியை காப்பாற்றிக்கொள்ள நீட் தேர்வை அவர் அனுமதித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.


latest tamil news



நீட் நுழைவுத்தேர்வு முடிவு வந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் கவுன்சிலிங் துவங்க வேண்டியுள்ளது. ஆனால், உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. ஆனால், கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க பழனிசாமி அரசு தயங்குகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். ஆம் நாங்கள் அரசியல் செய்யாமல், அவியலா செய்ய முடியும் ? மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை முன்னிறுத்தி செய்வது தான் அரசியல். சமூக நீதியை நிலைநாட்ட செய்வது அரசியல் என்று கூறினால் அதனை ஏற்கிறோம். இது முதல் கட்ட போராட்டம் தான். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்கும் வரை தி.மு.க.,வின் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasu - Mumbai,இந்தியா
24-அக்-202022:08:50 IST Report Abuse
Vasu ஜாதி அல்லது பொருளாதார அடிப்படை யில் தான் இட ஒதுக்கீடு. பள்ளிகளின் அடிப்படை யில் இட ஒதிக்கீடு என்பது தவறாகும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏற்க்கனவே சில இட ஒதுக்கீடு முறையில் கல்வி கற்கிறார்கள். மெரிட் லிஸ்ட் இல் அரசு பள்ளி மாணவரக்ளை முதலில் வைத்து லிஸ்ட் வெளி இட்டால் போதும். ஒரே மார்க் வாங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இருக்கும் பொது, அரசு பள்ளி மாணவரை முதலில் வைத்து லிஸ்ட் வெளி இட்டால் நல்லது. தேவை இல்லாத சட்டங்கள், பல ஒதிக்கீடுகள் ஒதுக்கீட்டின் பலனை தராது.
Rate this:
Cancel
Prem Kumar -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-202020:12:34 IST Report Abuse
Prem Kumar எதை எதிர்ப்பது எதை ஆதரிப்பது என தெரியாமல், மக்களின் ஆதரவு இல்லாவிட்டாலும் கூட , தனக்கு புரிந்ததற்கும், புரியாததற்கும் கூட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி, அதைதான் மக்கள் சேவை என கூறி/எண்ணி ஸ்டாலின் பெருமைபட்டு கொள்கிறார். அவரது இந்த மகத்தான சேவையை (??) மக்கள் எப்போதும் இழக்க விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் பெரிதும் நம்புகிறார். எனவே, அவரை ஏமாற்றாமல் 2021 தேர்தலுக்கு பிறகும் தொடர் போராட்டங்களுக்கு தலைமையேற்று வழி நடத்திட, எதிர்கட்சகளின் தலைவராகும் வாய்ப்பையாவது மக்கள் அவருக்கு கண்டிப்பாக தரவேண்டும்.
Rate this:
G.Kirubakaran - Doha,கத்தார்
24-அக்-202022:55:30 IST Report Abuse
G.Kirubakaranஎன்றைக்கு புரிந்தது ,திரு ஸ்டாலினுக்கு? பெயர் பேரில் வர வேண்டும் அவ்வளுவு தான் ....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
24-அக்-202018:53:44 IST Report Abuse
sankaranarayanan இட ஒதிக்கீடு என்ற வார்த்தையை வைத்துக் கொன்டே எத்தனை ஆண்டுகள் காலம் தள்ளுவார்கள்? அம்பேத்கார் கூறியது பத்து ஆண்டுகள்தான். அப்போது ஏன் அவரைப் பின்பற்றவில்லை. அவருடைய சொல்லிற்கு என்ன மதிப்பு கொடுக்கிரிர்கள் எதை எடுத்தாலும் இட ஒதிக்கீடு வந்துவிட்டது. மயானத்தில் இட ஒதிக்கீடு - பிறப்பிலும் இட ஒதிக்கீடு - வளர்ப்பிலும் இட ஒதிக்கீடு - வேலைவாய்ப்பிலும் இட ஒதிக்கீடு - சாவிலும் இட ஒதிக்கீடு - இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி எப்போது வரும்? ஆண்டவா? ஆளுகிறவா? ஆளப்போறவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X